Thirunavukkarasar: ”நான் எம்.பி., ஆகக்கூடாது என முயன்றவர்களுக்கு நன்றி “ – காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர்
காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தான் எம்.பி., ஆகக்கூடாது என சிலர் முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். திருநாவுக்காரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க
PM Modi: கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது எப்படி? – காங்கிரசை ஒருபோதும் நம்பக்கூடாது : பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ கண்களை திறந்து வைப்பதோடு திகைக்க வைக்கிறது! கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அநாகரிகமாக கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன . இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்துகிறது மற்றும் காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்பதை மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க
Arunachal Pradesh Polls: எதிர்த்து நிற்க ஆளே இல்லை..! அருணாச்சல பிரதேசத்தில் 10 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் போட்டியின்றி தேர்வு
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தலில், வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில், தற்போதைய முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதலமைச்சர் சௌனா மெய்ன் உள்ளிட்ட பாஜகவின் 10 எம்.எல்.ஏ.க்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
Election 2024: ”மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின், விலை ரூ.8,552 கோடி மட்டுமே” – 21 பேர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் சூழல் அரசியல் கட்சிகள் இடையேயான கருத்து மோதம் உச்சம் தொட தொடங்கியுள்ளது. பரஸ்பரம் ஒவ்வொரு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைய வேண்டும் என மிரட்டப்படுவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. மேலும் படிக்க
NCB to Director Ameer: ஜாபர் சாதிக் விவகாரம்; இயக்குநர் அமீரை ஆஜராக சொன்ன மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு..
டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி இயக்குநர் அமீரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி சுமார் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக தமிழ் திரைப்பட நடிகரும், திமுக அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கடந்த 9-ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் படிக்க
மேலும் காண