Lok Sabha Election 2024 Villupuram Lok Sabha Constituency Past Election Result History Winners Current Sitting MP Achievements Failures TNN | Villupuram Lok Sabha Constituency: விழுப்புரம் மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன..?

 
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதி. கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவை தொகுதி கலைக்கப்பட்டு விழுப்புரம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட ஆறு தொகுதிகள் அடங்கிய விழுப்புரம் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. நடைபெறக்கூடிய 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 14.94.529 வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.
அனல்பறக்கப்போகும் தேர்தல்: களம் காண காத்திருக்கும் கட்சி தளபதிகள்! விழுப்புரத்தில் யாருக்கு என்ன பலம்?
கடந்த 2009ஆம் ஆண்டு முதல்முறையாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை சந்தித்தது. 2009ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளார் ஆனந்தன் 3,06,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட மறைந்த சாமிதுரை 3,04,029 வாக்குகள் பெற்று வெறும் 2,797 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அதனை தொடர்ந்து 2014 நாடாளுமன்ற தேதில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 4,82,704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், திமுக சார்பில் போட்டியிட்டு மருத்துவர் முத்தையன் 2,89,337 வாக்குகள் பெற்று 1,93,367 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று 1,28,168 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயம்:
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 90 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு ஆகியவை பிரதான பயிற்களாக உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக கம்பு, தினை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த பரப்பளவான 7,22,203 ஹெக்டேரின், 3,37,305 ஹெக்டேர் (45%) பாசன பரப்பாக உள்ளது. விவசாயத்திற்கு பிரதான நீர் பாசனமாக இருப்பது தென்பெண்ணை ஆறு, வீடுர் அணை ஆகியவறை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகப்படியாக கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் நாடாளுமன்ற உறுப்பினர் உரிய விலையை பெற்றுத்தர வேண்டும். மேலும், கரும்பு நடவு முதல் வெட்டும் வரை இயந்திரமயமாகிவிட்ட சூழலில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இயந்திரங்களை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையும், குஜராத், நாக்பூர், கர்நாடாக போன்ற மாநிலங்களில் இருப்பது போல பெரிய அளவிலாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் கிராமங்கள் அதிகமுள்ள தொகுதி. எனவே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் இல்லை என்பது பெறும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது, எனவே படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக புதுச்சேரி, சென்னை, திருச்சி, பெங்களூர் என அண்டை மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நிலை உள்ளது.  படித்த இளைஞரள் வேலைக்காக வெளியூர்களுகு குடிபெயர்வதால் மாவட்டத்தின்  வளர்ச்சி என்பது தேக்க நிலையிலேயே உள்ளது.  எனவே விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்று பெறும் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிற்சாலைகளை தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், என்பதும் கேந்திரிய வித்யாலயா போன்ற கல்வி நிறுவங்களை தொடங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலேயே தங்க நகை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தி சிறப்பு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் நகை தொழிலாளர்களுக்கான தொழிற்பேட்டை ஒன்றிய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் என கோரிகைவிடுத்துள்ளனர்.
இரயில்:
தமிழ்நாட்டில் மிக முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றாக விழுப்புரம் இரயில் நிலையம் உள்ளது. சென்னையில் இருந்து திருச்சி வரை 320 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில் இடையே உள்ள விழுப்புரத்தில் தேஜஸ் இரயில் நிறுத்த வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தை போல வணிகர்களுக்கான காப்பீடு திட்டத்தை கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பணிகள் குறித்து எம்.பி. ரவிக்குமார் கூறுகையில்:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி, தமிழ்நாடு, இந்தியா என மூன்று தளங்களில் பணியாற்றிருப்பதாக தெரிவித்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். என்னுடைய கோரிக்கையை ஏற்று டைடல் பார்க் வானூர் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. திண்டிவனத்திற்கு அருகில் சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது.  உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுபாதையில் ட்ரோன் பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தியுள்ளேன். மரக்காணம் பகுதியில் உப்பு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் உள்ள வேளான் ஆராய்சி மையத்தை விரிக்கா நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவக்கரையில் ஐந்து கோடி மதிப்பீட்டில் கல்மரங்களை பாதுகாக்க புவியியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சார்ந்து நூறுநாள் வேலைக்கான நிதி, ஜிஎஸ்டி நிதியை பெற்று தர வலியுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளிவர கோரிக்கை வைத்து அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய அளவில் மத்திய மருத்துவ தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் இருந்தது இதனை வலியுறுத்தி நீதிமன்றம் சென்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 
ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் படிக்க நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையினர் மாணவர்கள் மேற்படிப்புக்கான உதவி தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியது அதனை எதிர்த்து போராடி பெற்றுக்கொடுத்துள்ளேன். மீனவர்கள் அனுமதி பெற்றே மீன்பிடிக்க செல்லவேண்டும் என்ற மசோதாவை எதிர்த்தன் காரணமாக அது தடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி 212 வினாக்களுக்கு  விடைகளை பெற்றுள்ளேன். கற்பபைவாய் புற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என எனது தொகுதிக்கு உட்பட்ட 12.58 ஆயிரம் ஒதுக்கி 130 சுகதர நிலையத்ட்திற்கு கற்பப்பைவாய் புற்றுநோயை கண்டறியும் கருவியை வாங்கி கொடுத்துள்ளேன்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் மேசைகள், இருக்கைகள் மற்றும் நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி விடுகளில் அனைத்திற்கும் மாணவர்கள் கட்டில்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்புத்துப்பட்டில் உள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு மைத்தில் 440 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளேன். இருளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 61 முறை உரையாற்றியுள்ளேன்.
தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பொதுமக்களின் கருத்து:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியை அதிமுக இரண்டும் முறையும், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் ஒருமுறை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட அனைத்து தரப்பு மக்களும் எளிதில் அணுகக்கூடியவராக ரவிக்குமார் இருப்பது மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதுவே அவருக்கான சாதகமாக பார்க்கப்படுகிறது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான மேசை, இருக்கைகள் நூலகங்களுக்கு தேவையான நூல்கள் என கல்வி சார்ந்த ரவிக்குமாரின் பணி அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கான உதவி தொகையை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்துள்ளார். தொகுதி சார்ந்த செயல்பாடுகள் மட்டுமின்றி, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனைகளிலும் ரவிக்குமாரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுக்கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகள்:
விழுப்புரம் நாடாளுமன்றத்தில் உள்ளடக்கிய ஆறு தொகுதிகளும் அதிகப்படியான கிராமங்களை உள்ளடக்கிய பகுதி என்பதால் படித்த இளைஞ்ர்கள் வேலைவாய்புக்காக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நிலையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, மேலும் விவசாயம் சார்ந்த பண்ணைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார இரயில்கள் விழுப்புரத்தில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. விழுப்புரம் வேலூர் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேஜஸ் இரயில் விழுப்புரம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை போன்ற பல குறைபாடுகள் உள்ளது. இருப்பினும் கோரிக்கை குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு சென்றார் என்ற ஆறுதல் மட்டுமே மிச்சமாக உள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் மருத்துவர் முத்தையன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவும் தனித்து போட்டியிடக்கூடிய சூழலில், ரவிக்குமார் தனி சின்னத்தில் போட்டியிட்டாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Source link