Sabarimala Temple: | Sabarimala Temple:


Sabarimala Temple: மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ஆம் தேதி மாலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சபரிமலை ஐயப்பன் கோயில்:
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.  கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி  தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு, இரண்டு நாட்களுக்கு பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு, கடந்த மாதம் 20ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. 
மாசி மாத பூஜை:
கடந்த சபரிமலை சீசனின்போது முன் எப்போது இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  இதனால்,  நடப்பு  2023-24ஆம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357,47,71,909 என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில், மாசி மாத  ஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று எந்த பூஜைகளும் நடைபெறாது.
மீண்டும்  பிப்ரவரி 14ஆம் தேதி காலை கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். பிப்ரவரி 14ஆம் தேதி காலை ஐந்து மணிக்கே பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18ஆம் தேதி இரவு ஹிரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்பட உள்ளது.
யாரெல்லாம் அனுமதி?
இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம் – இஸ்ரோவின் புதிய இலக்கு என்ன?

மேலும் காண

Source link