உலகுக்கு ரெட் அலர்ட்.. 2024இல் காலநிலை மாற்றத்தால் ஆபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!


Climate Change: உலக நாடுகள் மீது காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
உலகை மிரட்டும் காலநிலை மாற்றம்:
கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதன் உச்சத்தை எட்டியது கூட சொல்லலாம். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 2024ஆம் ஆண்டு, காலநிலை பிரச்னைகள் மேலும் மோசமடையும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக, கடலின் வெப்பம் அதிகரிப்பது, கடலில் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவை மிகப் பெரிய பிரச்னைகளாக இருக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய காலநிலை அறிக்கையானது ஆண்டுக்கு ஒருமுறை ஐநாவின் உலக வானிலை அமைப்பால் வெளியிடப்படுகிறது. இந்தாண்டுக்கான காலநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்:
சராசரி வெப்பநிலை 174 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 1.45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடலின் வெப்பநிலை 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஆண்டு முழுவதும் 90 சதவிகிக கடல்பகுதி வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு கட்டமைப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் செலஸ்டி சாலோ கூறுகையில், “உலகுக்கு உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட் அளிக்கிறது.
கடந்த 2023இல் நாம் எதிர்கொண்டது, குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவான கடல் வெப்பம், பனிப்பாறை உருகுவது, அண்டார்டிகாவில் கடல் பனி உருகி வருவது குறிப்பாக கவலைக்குரியவை. கடல் வெப்பம் குறிப்பாக கவலைக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் அது, கிட்டத்தட்ட மீளமுடியாத அளவுக்கு நிலைமையை தலைகீழாக புரட்டி போடுகிறது.
இந்த போக்கு உண்மையில் மிகவும் கவலையளிக்கிறது. வளிமண்டலத்தை விட அதிக நேரம் வெப்பத்தை வைத்திருக்கும் நீரின் பண்புகளே இதற்கு காரணமாகும்” என்றார்.
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் உந்தப்பட்ட காலநிலை மாற்றம், இயற்கையான எல் நினோவை (எல் நினோ என்பது கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமயமாதலை விவரிக்கும் ஒரு காலநிலை மாற்றமாகும்”  உருவாக்குகிறது.
இதையும் படிக்க: காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான உணவை ஒதுக்க வேண்டும்: குடியரசு தலைவர் முர்மு வேண்டுகோள்

மேலும் காண

Source link