music composer devi sri prasad shares emotional note after ilaiyaraja visits his studio


இசைஞானி இளையராஜா தனது ஸ்டுடியோவுக்கு வருகை தந்தது குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
இசைஞானி இளையராஜா இன்று தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவுக்கு வருகை தந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட டி.எஸ். பி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இளையராஜா இசையும் என்னையும் பிரிக்க முடியாது
”ஒரு சிறு குழந்தையாக, இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த  இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்குள் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது. நான் படிக்கும்போது கூட, எப்போதும் என்னைச் சுற்றி அவருடைய இசையுடன் வளர்ந்தேன். பிரிக்க முடியாத வகையில் நான் அவருடைய இசையுடன் இணைந்திருக்கிறேன்.  எப்போது இருப்பேன். ஒரு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற கனவை எனக்குள் விதைத்ததும் அவரது இசைதான் 
ஸ்டுடியோவை உருவாக்கியதும்  இளையராஜாவின் ஃபோட்டோவை மாட்டினேன்

1/2My LIFETIME DREAM came TRUE🎶❤️🙏🏻Maestro ISAIGNANI ILAYARAJA@ilaiyaraaja SIRin my Humble Studio..🎶🎶My “GOD OF MUSIC” In my TEMPLE🙏🏻🤗❤️🎶 pic.twitter.com/W4EY1qHacn
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) March 12, 2024

 “நான் இசையமைப்பாளராக மாறி எனது சொந்த ஸ்டுடியோவை உருவாக்கியதும் அதில் இளையராஜாவின் பெரிய புகைப்படம் ஒன்றை மாட்டினேன். அந்த புகைப்படத்தின் முன் இளையராஜாவுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இளையராஜா ஐயா என்னைப் பார்க்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு.
இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நமது உண்மையான ஆசைகள் மற்றும் அன்பை நிறைவேற்றக் கூடியது. அதன்படி இறுதியாக எனது இந்த கனவு நனவாகியது, குறிப்பாக எனது குருவான ஸ்ரீ மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணா பிறந்த நாளில் என்னுடைய கனவு நினைவாகி உள்ளது. நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று. இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா, உங்கள் வருகைக்கு நன்றி.
என்னையும் எனது குழுவிற்கும் உங்களுடைய ஆசீர்வாதத்தை வழங்கியதற்கும் நன்றி. எப்பொழுதும் எங்களை ஊக்குவித்தும் சொல்லிக்கொடுத்தப் படியும் இருந்ததற்கு நன்றி. லவ் யு ஃபார் எடர்னிட்டி டியர்ஸ்ட் ராஜா சார் இந்த சந்தர்ப்பத்தில், இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய திறைமைகளை வெளிப்படுத்த  வாய்ப்புகளை வழங்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என் குடும்பம், நண்பர்கள் மற்றும் குழு எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கிறது. என் இசையை விரும்பி என்னை எப்போதும் இந்த உயர் பீடத்தில் அமர்த்தும் அனைத்து மக்களும் என் மீதும் எனது இசை மீதும் அபார அன்பைப் பொழிந்த ரசிகர்களுக்கும் நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link