Gujarat Pani Puri Seller Who Looks Like PM Modi videos viral on social media Doppleganger Anil Bai Thakkar

பிரதமர் மோடியை போன்று தோற்றம் கொண்டு ஒருவர் பானி பூரி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்டு பானி பூரி விற்பனை செய்யும் நபர், பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பானி பூரி விற்பனை:
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்த மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், குஜராத்தில் பானி பூரி விற்கும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தோற்றம் கொண்ட ஒருவரின்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  குஜராத்தின் மாநிலத்தில் துளசி பானி பூரி என்ற பெயரில் அனில் பாய் தக்கர் என்பவர் பானி பூரி கடை நடத்தி வருகிறார். இவரது தோற்றமானது, பிரதமர் மோடியை போலவே இருக்கிறது என்றே கூறலாம். பிரதமர் மோடி போன்ற உடை , தாடி , மீசை மற்றும் முக அமைப்பு ஆகியவை பிரதமரை போன்று சற்று ஒத்து இருப்பதாக தெரிகிறது.

Meet Pani Puri Seller Who Resembles PM Modi 🇮🇳 Not Only in Appearance but Also in Admiration. He’s deeply inspired by our PM’s values. Just like Modi ji’s emphasis on cleanliness, this vendor keeps his stall clean, ensuring a hygienic & delightful dining experience for all. pic.twitter.com/Tnog6rg1lH
— Mehul Hingu (@mehulhingu_com) October 23, 2023

செல்பி எடுக்கும் மக்கள்:
இதன் காரணமாக, இவர் உள்ளூர் மக்களால் பிரதமர் மோடி என்று அழைக்கப்படுகிறார். இந்த பானி பூரி கடையை அனில் பாய் தக்கரின் தாத்தா தொடங்கினார்.  தனது 18 வயதில் இருந்து ‘துளசி பானி பூரி கடையில்’ பானி பூரி விற்று வருகிறார்.  தற்போது 71 வயதான தக்கர் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தனது தோற்றத்தால் அடிக்கடி தன்னுடன் செல்பி எடுத்து கொள்கிறார்கள்.
பிரதமர் மோடி போன்ற தோற்றத்தினால் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர்களிடம் இருந்து எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கிடைத்துள்ளது. பிரதமரின் செயல்பாடுகளால் தாம் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும்  தக்கர் தெரிவிக்கிறார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில், பிரதமர் பானி பூரி விற்பனை செய்வது போன்ற தோற்றம் கொண்ட ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்த சிலர் பிரதமர் மோடி பரப்புரையின்போது பானி பூரி விற்பனை செய்கிறார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.                 

Published at : 27 Apr 2024 05:38 PM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link