RBI On REPO Rate: தொடர்ந்து 6வது முறை – ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

RBI On REPO Rate: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, ரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 6வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 6.50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு ஆறாவது முறையாக நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்திலும், ரெப்போ ரேட் விகிதத்தை அதே நிலையில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டு கடன்கள், வாகனக் கடன் உள்ளிட்ட  கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகைக்கு வழங்கப்படும் வட்டியும் உயராது.
”வளர்ச்சி நிலையானதாக இருக்கும்”
இதுதொடர்பாக பேசியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “2024 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சியானது, பிராந்தியங்கள் முழுவதும் பன்முகத்தன்மையுடன் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தக வேகம் பலவீனமாக இருந்தாலும், அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது மற்றும் 2024 இல் வேகமாக வளர வாய்ப்புள்ளது. பணவீக்கம் கணிசமாக தணிந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மேலும் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை பங்கேற்பாளர்கள் முக்கிய மத்திய வங்கிகளின் விகிதக் குறைப்புகளின் நேரம் மற்றும் வேகத்தில் தங்கள் எதிர்பார்ப்புகளை சரிசெய்வதால், நிதிச் சந்தைகள் நிலையற்றவையாகும்.

#WATCH | RBI Governor Shaktikanta Das says, “…The Reserve Bank undertook six fine-tuning variable rate reverse repo auctions, that is, VRRR auctions from February 2 to February 7, 2024 to absorb surplus liquidity. Financial market segments have adjusted to the evolving… pic.twitter.com/j5WLX1zJDy
— ANI (@ANI) February 8, 2024

”கடன் சுமையை குறைப்பது அவசியம்”
உலக பொதுக் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 100% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தசாப்தத்தில், வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களில் உள்ள பொதுக் கடன் அளவுகள், உண்மையில், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. உலக அளவில் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த வளர்ச்சியின் சூழலில் கடன் நிலைத்தன்மையின் சவால்கள் புதிய ஆதாரங்களாக மாறலாம். மன அழுத்தம், பசுமை மாற்றம் உட்பட முன்னுரிமை பகுதிகளில் புதிய முதலீடுகளுக்கான நிதி இடத்தை உருவாக்க கடன் சுமைகளை குறைப்பது அவசியம்” என சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
 
 
 
 

Source link