மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி? பீகார் பயணத்தில் என்ன திட்டம்?
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை, பீகார் மாநிலம் பெட்டியா நகர் சம்பாரனில் உள்ள ராமன் மைதானத்தில் இருந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்றும் போட்டி நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியக் கூட்டணி சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் படிக்க..
கிடைக்குமா வெள்ள நிவாரணம்? – உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்!
வெள்ள நிவாரண நிதியாக கோரிய 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்திக்க உள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. வரலாறு காணாத அளவில் கொட்டிய கனமழையால் வடமாவட்டங்களில் வெள்ளத்தில் தத்தளித்தன. மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீள தொடங்கின. இந்த பிரச்னை முழுமையாக முடிவுக்கு வரும் முன்பே, தென்மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவில் பேய்மழை பெய்தது. மேலும் படிக்க..
இன்று காணொலியில் I.N.D.I.A., கூட்டணி ஆலோசனை – தேர்வாகிறார் ஒருங்கிணைப்பாளர்? மம்தா அவுட்..!
I.N.D.I.A., கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்த பாஜகவை, வீழ்த்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கான தேசிய மற்றும் மாநில கட்சிகள் அடங்கிய I.N.D.I.A எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்கனவே 4 முறை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்தி கூட்டணியின் இலக்கு என்ன, எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டு பாஜகவை வீழ்த்துவது என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் படிக்க..
பொங்கல் விடுமுறை: சென்னைக்கு தற்காலிக டாட்டா! நேற்று மட்டும் அரசு பேருந்தில் இவ்வளவு பேர் பயணமா?
இந்த ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று தொடங்கி அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரைக்கும் பொங்கல் கொண்டாட்டத்திற்கான விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துவருகின்றனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே அறிவித்தைப் போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 2.17 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் படிக்க..