திருப்பதி: செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவல் துறை அதிகாரி மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கம்போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னமய மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் குன்றேவாரி பள்ளி சந்திப்பு அருகே வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் போலீசார் மீது ஏறிச் சென்றது. இதில் சிறப்பு அதிரடிப்படை காவலர் பி.கணேஷ் (வயது 30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவலர் மீது காரை ஏற்றிச் சென்ற கடத்தல்காரர்கள் தப்பிஓட முயன்றனர். இருப்பினும் காவல் துறையினர் விடாமல் துரத்தி, அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது 3 பேர் தப்பி ஓடிய நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட காரில் இருந்து 7 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் காண

























cual es el mejor sitio de favorito champions apuestas