மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஸ்பெயின் நகரம்!

ஸ்பெயின் நாட்டில் ஒரே இரவில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள சாலைகளிலும், வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஸ்பெயினின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அல்கானார் மற்றும் டாரகோனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

ஏராளமான வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் காவல் துறையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனிடையே பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.