Cyber crimes on the rise in Villupuram Cybercrime police alert villupuram advertisements | விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் ஏமாறவேண்டாம்


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் சைபர்கிரைம் அதிகரித்து வருவதால் சைபர்கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
 விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலைய காவல்துறையினர் Cyber Crime  குற்றங்கள் பெருகி வரும் வேளையில் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
சைபர்கிரைம் விழிப்புணர்வு 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit Card/Debit Card Details/OTP/CVV/Expiry Date எண்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.
Online மூலம் Part Time Job என வரும் போலி Link விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Fake Loan App இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். உங்கள் கைபேசி Hack செய்யப்பட்டு விடும் ஜாக்கிரதை,
Naptol, Meesho பரிசு விழுந்துள்ளதாக வரும் தபால் கூப்பன்களை பார்த்து ஏமாறாதீர்கள்.
OLX போன்ற இணையதளத்தை பயன்படுத்தி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் விற்பதற்காக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.
Telegram, Facebook, Instagram போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனங்களை வாங்க வேண்டாம்.
Army Vehicles Purchase 6163 அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம் இது முற்றிலும் Fake ஆனது.
Unknown Link, Message, Call, Video Call, Sexy Video Call எவ்வித பதிலும் அளிக்காமல் விட்டுவிடுங்கள்.
Any Desk Quick Support CL Remote Access Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
Fake Investment App பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரை கூறி பொய்யான முதலீடு செய்ய தொலைபேசி மூலம் அழைத்து பணம் செலுத்தக்கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள்.
அறிமுகம் இல்லாத நபர் Whatsapp or Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர். இது முற்றிலும் மோசடியானது.
இலவச WiFi வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை தவிர்த்துவிடுங்கள்.
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி KYC Biometric System Update என கூறுவதை நம்பி ஏமாறவேண்டாம்.
Helicopter Ticket Booking Q வேண்டாம்.
Postal Payment Bank KYC Update வேண்டாம்.
Credit Card Bonus Point Redeem செய்துதருவதாக கூறி போன் வந்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம்.
True Caller App Gpay, Phone pe பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இது உங்கள் போனை Hack செய்துவிடும்.
தேவையற்ற App-களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். UnUsed App களை உடனடியாக செய்து விடுங்கள்.
உங்களது மொபைலில் Date of Birth, Cell Phone Number போன்ற Easily Access பண்ண கூடிய Password-ஆக வைக்க வேண்டாம்.
உங்களது Cellphone ல் Profile DP-இல் உங்கள் Photo வைக்க வேண்டாம். உங்கள் Photo morphing செய்து பணம் பறிக்கக்கூடும்.
Instagram IMO போன்ற சமூக வளைதளங்களை பயன்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பறிமாற்றம் செய்ய கூடாது. Facebook, Whatsapp போன்ற சமூகவளைதளங்கள் மூலம் உங்களிடம் தெரிந்த நபர்களின் அக்கவுண்ட் எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை கேட்டு நம்பி பண உதவி செய்து ஏமாற வேண்டாம்.
ATM card பயன்படுத்தும்போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ATM Card PIN நம்பர் பணம் எடுத்து தருமாறு கொடுக்கக்கூடாது. ATM Crad பணம் பரிவர்த்தனை முடிந்தவுடன் Cancel Button ஐ அழுத்த வேண்டும். Password, OTP -ஐ யாரிடமும் பகிரவேண்டாம்.
Online மூலம் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நம்பி முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Cryptocurrency என வரும் போலி Link விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Google Search தளத்தில் Customer Care மற்றும் Government Website போல 12 ஆயிரம் போலியான வெப்சைட்கள் வெளியிடப்பட்டுள்ளது அதை தவறுதலாக பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.
EB Bill செலுத்துமாறு Unknow Number மூலம் வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Email, Watsapp Massenger Computer software பதிவிறக்கம் செய்ய வேண்டாம் அது Random Wires ஆக மாறி உங்கள் சிஸ்டம் செயல் இழக்க செய்ய வாய்ப்புள்ளது.
Artificial Intelligence போல Whatsapp messenger-யை பயன்படுத்தி Video Call மூலம் பேசி பண உதவி கேட்கலாம் அது முற்றிலும் போலியானது ஏமாற வேண்டாம்.
Multimedia Marketing என வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
Merchant Fraud மொத்த வியாபாரத்திற்கு குறைந்த விலையில் புளி, வெங்காயம், பூண்டு கிடைக்கும் என வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்த வேண்டாம்.

மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இணையதளம் மூலம் பண இழப்பு ஏற்படும் பட்சத்தில் 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண

Source link