Sun tv Ethirneechal serial today episode April 9 written update


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் குணசேகரன் நிச்சயம் என்ற பெயரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்துக்கும் திருமணத்தை முடித்துவிட ஏற்பாடுகளை செய்கிறார். சித்தார்த் காணவில்லை என்ற உண்மை அவருக்கு தெரிய வந்ததும் குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். தர்ஷினியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதால் ஈஸ்வரி மகளிர் ஆணையத்தில் குணசேகரன் மீது புகார் அளிக்கிறாள். அவர்களும் குணசேகரனை நேரில் வந்து பார்த்து மாறிமாறி கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுகிறர் குணசேகரன்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஏப்ரல் 9) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 
மகளிர் ஆணையத்தில் இருந்து வந்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அப்படியே கதையை மாற்றுகிறார் குணசேகரன். “உன்னோட பொண்ணுக்கு கல்யாணமா? அப்படினு யார் சொன்ன? நான் சொன்னது தர்ஷன் கல்யாணத்தை பத்தி” என குணசேகரன் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கும் இடத்திற்கு சக்தியை கதிரின் ஆட்கள் அழைத்துச் செல்கிறார்கள். “ஜனனியும் நானும் சேர்ந்து உனக்கும் அஞ்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்குறோம்” என சக்தி  சித்தார்த்திடம் சொல்கிறான். எவ்வளவோ சொல்லி சித்தார்த் மனதை மாற்ற நினைக்கிறான் சக்தி. அவர்கள் பேசுவதை கரிகாலன் போனில் வீடியோ எடுக்கிறான்.
 
ஈஸ்வரி வெண்பாவை வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதைப் பார்த்த குணசேகரன் ஆவேசமடைந்து “உன்னையும் அந்த தாடிக்காரனையும் ஒழிச்சு காட்டுறேன் பாரு” என சவால் விடுகிறார். “என்னோட பொண்ணு வாழ்க்கையை அவளுக்கு பிடிச்ச மாதிரி அமைச்சு காட்டுவேன்” என சவால் விடுகிறாள் ஈஸ்வரி. அதைக் கேட்ட தர்ஷினியின் முகம் மாறுகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
 

எதிர்நீச்சலில் கடந்த சில மாதங்களாக கதைக்களம் வேறுவிதமாக நகர்ந்து வருகிறது. மாறி மாறி கல்யாணப் போராட்டங்கள், கடத்தல் நாடகங்கள், குடும்ப சண்டைகள் தான் நடைபெற்று வருகின்றன. அப்பத்தாவில் தொங்கிய கடத்தல் நாடகங்கள் தற்போது சித்தார்த் வரை தொடங்குகிறது. கடத்தப்படும் நபர்கள் தான் மாறுகிறார்களே தவிர கதையை வேறு திசை பக்கம் திரும்பவில்லை. சாமியாடி குணசேகரன் இனிமேல் ஜெயிக்கப் போவதில்லை, இனி உனக்கு அழிவு தான் என சொன்னது போல் குணசேகரன் தோல்வியை சந்திப்பாரா? கதை விறுவிறுப்பாகுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலுக்கு இருந்த மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. வேல ராமமூர்த்தி குணசேகரனாக என்ட்ரி கொடுத்த பிறகு கதைக்களத்தையே டோட்டலாக மாற்றிவிட்டார் இயக்குநர். 

மேலும் காண

Source link