பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்தார் மோடி. பின்னர், கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். வழிநெடுக பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடங்கியது கேலோ இந்தியா விளையாட்டு:

பின்னர், நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். சென்னையில் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து, சென்னையில் மட்டுமமின்றி திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டி விவரங்கள்:

சென்னையில் முதன்முறயாக நடைபெற உள்ள இந்த கேலோ இந்தியா விளையாட்டில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

முதன்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டாக நடைபெறுவது (DEMO Sports) உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் இடம் பெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்களை, விளையாட்டு ஆர்வலர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்:

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000-க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள். போட்டிகள் சிறந்த முறையில், நடைபெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் வந்து தங்குதற்கான இடவசதிகள், உணவு வசதிகள், போட்டி நடைபெறும் இடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதற்கான பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்திய விளையாட்டு ஆணையம், பல்வேறு தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
abc esportiva apostas de valor ios, Warren,
betting lines for today (Wilton) advice sites
poker sécurisé suisse Here is my web blog – casino crypto luxembourg (Lawanna)
jackpot quotidien casino non français retrait rapide – https://angelabattisteyoung.com/2026/04/24/le-meilleur-casino-en-ligne-pour-slot-slot-gratuit-france-2026/ –
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

`பரந்தூர் விமான நிலையத்திற்குப் பதிலாக மீனம்பாக்கத்தில் 5-வது முனையம்'- எம்.பி சச்சிதானந்தம் யோசனை! | ACTPnews.com

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்’; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை! | Puducherry CM Rangasamy presented a budget worth ₹14,300 crore for the 2026-2027 financial year | ACTPnews.com

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்.எல்.ஏக்கள்? |Udhayanidhi Shows Little Interest in Assembly Debates; DMK MLAs Upset? | ACTPnews.com

The demolished Railway Station Vinayagar Temple! Is Christian preacher Mohan C. Lazarus behind it?-இடிக்கப்பட்ட ரயிலடி விநாயகர் கோயில்!; பின்னணியில் கிறிஸ்தவ மதபோதகர் மோகன். சி. லாசரஸா | ACTPnews.com

betting basketball my website :: spille odds snooker (https://Hoop.danspot.dk/Bettingshjaelp-hvor-finder-man-det/)