கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டம்; திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தின் முதல்நாள் திங்கள்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை , செய்யாறு , வந்தவாசி , சேத்துப்பட்டு, ஆரணி , செங்கம் , கண்ணமங்கலம் ,மோத்தகல் உள்ளிட்ட ஊர்களில் உள்ள  பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய உதவிகள் மற்றும் குறைகளை கூறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து கோரிக்கை மனுக்களை அளித்து கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மாவட்ட எல்லை பகுதியில் இருந்தும் வயதான மூதாட்டிகள் தாய் மார்கள்  என அனைவரும் கால் வலிக்க மணி கணக்கில் காத்திருந்து மனுக்களை அளிப்பனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மனுக்கள் அளிக்கவரும் பொதுமக்கள் பலமணிநேரம் நின்றுகொண்டே காத்திருந்து மனுக்களை அளிப்பது  அறிந்த உடனே பொதுமக்களுக்கு  அமர்வதுக்கு நாற்காலிகளை அளித்து  பொதுமக்கள் அனைவரும் உட்கார்ந்து ஓய்வு எடுத்து செல்வத்தற்நடவடிக்கை எடுத்தார்.

அதே போன்று பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து கை குழந்தையுடன் பெண்கள் வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் பாலூட்டும் அறையையும் மற்றும் குழந்தைகளுக்கு பசியை போக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சொந்த செலவில் குழந்தைகளுக்கு பால் அளித்தார்.மேலும் அவர்களை நேரில் சந்தித்து மனுக்களையும் மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு இந்த மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.இந்நிலையில்  பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் ஏழை எளிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியாக அமர்ந்து மனுக்கள் எழுதுபவர்களிடம் பணம் கொடுத்து தங்களது குறைகளை மனுவாக எழுதி வருகின்றனர்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்தில் ஒரு பெண் மனு அளிக்க வந்தார். அப்போது மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் இந்த மனு உங்களுக்கு தவறுதலாக எழுதி கொடுத்தது யார் என்று கேட்டார். அதற்கு மாவட்ட ஆட்சியர் வளாக வெளி நபர்கள் மூலம் மனு எழுதி வந்ததாக அந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர்  அழைத்த மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் எத்தனை துறை உள்ளதோ அந்த துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தலா இரண்டு நபர்கள் வாராந்தோறும் திங்கட்கிழமையன்று வெளியில் அமர்ந்து மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதித் தர வேண்டும் என உத்தரவிட்டார்.  இந்த நிகழ்வு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

Source link