உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்லவபுரம் என்கிற பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் அவர்களது பெற்றோர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவமானது, பல்லவபுரம் ஜனதா காலனியில் சனிக்கிழமை மாலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
செல்போன் சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பிடித்தது. இதில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்ட தீயானது, படுக்கை விரிப்பில் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, குடும்பத்தினர் படுக்கை விரிப்பில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது படுக்கை விரிப்பில் பற்றிய தீயானது, தூங்கி கொண்டிருந்தவர்களின் மீது பற்றியது.
4 குழந்தைகள் உயிரிழப்பு:
இதனால் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 10 வயதான குழந்தை, எட்டு வயதான குழந்தை, ஆறு வயதுடைய குழந்தை மற்றும் நான்கு வயதுடைய குழந்தை ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோர்களான 41 வயதுடைய ஜானி , 37 வயதுடைய பபிதா ஆகியோர் காயமடைந்தனர்.
விபத்து நிகழ்ந்ததை அடுத்து , உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனாலும், சிகிச்சை பலனின்றி நான்கு குழந்தைகளும் உயிரிழந்தனர். தந்தையான ஜானி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பபிதாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மொபைல் சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட உயிரிழப்பானது , அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை:
மொபைல் சார்ஜ்-னால், தீ விபத்து ஏற்படுவது, இது முதல் முறை இல்லை. இதுபோன்ற தொடர்ச்சியான சோகமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு இருப்பதை அறிந்து கொண்டிருக்கிறோம். இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கையில், மொபைல் சார்ஜ் செய்யும் போது பயன்படுத்த வேண்டாம் , தொலைபேசியில் சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போதே பேசுவது, பாடல்கள் கேட்பது போன்றவற்றை தவிருங்கள். இரவில் மொபைல் சார்ஜ் போட்டு விட்டு, காலையில் எழும்போது சார்ஜ்ஜை அகற்ற வேண்டாம். தூங்கும் போது அருகில் சார்ஜ் போடுவதை கட்டாயமாக தவிருங்கள் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.