Kanchipuram news rare opportunity for entrepreneurs to set up a small-scale handloom park – TNN


காஞ்சிபுரத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க தொழில்முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு, மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தகவல்.
கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) 
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
நல்லதொரு வியாபார சந்தை
இத்திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்குத் தேவையான தொழிற்கூடம், Preloom, Post Loom மற்றும் Godown வசதி அமைத்து, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் (CFC) உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் தேவைக்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் / Wholesalers / Retailers / Cooperative Societies / Associations / Entrepreneur மற்றும் Master Weaver நெசவாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை (SPV) அமைத்து, நல்லதொரு வியாபார சந்தை, Design தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தி செய்யத் தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றைக் கொண்டு வந்து, மேற்படி பொது வசதி மையத்தில் (CFC) உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.
வேலைவாய்ப்பு
கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், காஞ்சிபுரத்தில் அமைக்கப்படவுள்ள, மேற்படி சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது.
இணையதள முகவரி
இந்த அரிய வாய்ப்பை பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் 22.02.2024-க்குள் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,  தெரிவித்துள்ளார்கள்.

மேலும் காண

Source link