×

தமிழ்நாடு:

ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர். 
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார். 
செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு 12 ஆம் தேதி வழங்கப்படுமென விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் 10 நாள் பிரமாண்ட மலர் கண்காட்சி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதா எப்போ இறப்பார் என காத்திருந்த எடப்பாடி – ஓ.பன்னீர்செல்வம் 
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைவி3 நிர்வாகி தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம்: சக்தி ஆனந்தன் உட்பட 200 பேர் கைது
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: தமிழகத்தில் 27 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

இந்தியா: 

கடந்த ஆண்டில் நன்கொடை மூலம் பாஜகவுக்கு ரூ.2361 கோடி வருவாய்; காங்கிரஸுக்கு கிடைத்ததை விட 5 மடங்கு அதிகம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை
யாருடைய குடியுரிமையும் பறிபோகாது; மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் – அமித்ஷா திட்டவட்டம்
திருநங்கைகள் உட்பட ஒதுக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்துவதாகவும், அவர்களில் 17,000 பேர் அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர் – மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை
மேற்கு வங்கத்தில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய கோரி பெண்கள் போராட்டம் முற்றியதை தொடர்ந்து 144 தடை விதிக்கப்பட்டுள்ளது
மதிய உணவின்போது பிரதமர் மோடி, அவரது தினசரி பழக்க வழக்கங்கள் பற்றி எங்களிடம் பேசினார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாக திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

உலகம்:

ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்ற 3 சுயேட்சை நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு ஆதரவு.
காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் – 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

விளையாட்டு: 

அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.
சென்னை ஓபன் டென்னிஸ்: ராம் குமார் – மைனெனி ஜோடி சாம்பியன்.
எஸ்.ஏ.20 ஓவர் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இரண்டாவது முறையாக சாம்பியன்.
ப்ரோ கபடி லீக்: புனேரி புல்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது தமிழ் தலைவாஸ் அணி

 

Published at : 11 Feb 2024 07:01 AM (IST)

மேலும் காண

Source link

Author

anbilchinnathambi@gmail.com

Related Posts

மும்பை அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு…

மும்பை அருகே நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான...

Read out all

ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்… அசாம் மாநிலத்தில் ரயில் மோதியதில் ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழந்த‍து, அந்த ரயிலில் பயணித்த...

Read out all

கேரளாவில் பயங்கரம் – அந்தரத்தில் தொங்கிய ரெஸ்டாரன்ட் – மக்கள் அச்சம்…

கேரளாவில் அந்தரத்தில் தொங்கும் ரெஸ்டாரன்டில், பல மணி நேரம் வாடிக்கையாளர்கள் தவித்த‍தால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அனேச்சல் பகுதியில் ஒரு மாத‍த்திற்கு முன்பு அந்தரத்தில் தொங்கும்...

Read out all

உத்தரகாண்டில் அடுத்ததுத்து பெரிய நிலச்சரிவு வரும் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த‍டுத்து மேகவெடிப்பால் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்றும் திடீரென மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை...

Read out all

ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…

ஆந்திராவில் சோதனை முயற்சியாக ஆற்று நீரில் இயக்கப்படும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விமான சேவை என்றாலே, அதற்கு விமான நிலையம், ஓடுதளம் என ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலம்...

Read out all

பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க‍க் கூடாது… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பரிந்துரை…

பெண்கள் பாதுகாப்புக்காக, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க‍க் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள்...

Read out all