Ashwin Records: மருத்துவமனையில் அம்மா; நாட்டுக்காக தனது 100-வது டெஸ்ட்டில் அஸ்வின் முறியடித்த சாதனைகள்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 1-4 என்ற கணக்கில் இழந்துள்ளது. இங்கிலாந்து அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தினால் மீதம் இருந்த நான்கு போட்டிகளையும் டிரா செய்யாமல் வென்று இங்கிலாந்து அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பெரும்பாலும் இல்லாமல் அதிகப்படியான இளம் வீரர்களைக் கொண்டே விளையாடி இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இந்த தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவரான அஸ்வின் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.  அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய 4வது சர்வதேச டெஸ் வீரர் என்ற சாதனையை ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, முத்தையா முரளிதரன் ஆகியோருக்குப் பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36வது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய நான்காவது சர்வதேச வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தது மட்டும் இல்லாமல், அதிகமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையில் கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ஒரு அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 114 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் 114 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

100வது டெஸ்ட் போட்டியில் சர்வதேச போட்டியில் சிறந்த பங்களிப்பை அணிக்கு வழங்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தை அஸ்வின் பெற்றுள்ளார். இவர் தனது 100வது போட்டியில் 128 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் வங்கதேசத்திற்கு எதிரான அவரது 100வது டெஸ்ட்டில் 141 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சிறந்த பங்களிப்பாக இருந்தது.

அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் விளையாடும்போது அவரது தயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்த போது சென்னைக்கு வந்து தாயாரின் உடல் நிலையில் அக்கறை செலுத்திய அஸ்வின், அதன் பின்னர் அணியில் இணைந்து கொண்டார். 5வது போட்டியில் அஸ்வின் விளையாட மாட்டார் என பலரும் கூறிவந்த நிலையில், அஸ்வின் 5வது டெஸ்ட்டில் அதாவது அவரது 100வது சர்வதேச டெஸ்ட்டில் களமிறங்கி சிறப்பாக பந்து வீசி பல சாதனைகளை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வின் தனக்கென தனி வரலாற்றையே படைத்துள்ளார்.

இந்திய அணி இதுவரை மொத்தம் 579 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 178 போட்டிகளில் வெற்றியும் 178 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. 222 போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளன. ஒரு போட்டி மட்டும் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. இந்திய அணி இதுவரை இங்கிலாந்து அணியை 8 முறை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதில் 7 முறை இந்தியாவிலும் ஒரு முறை இங்கிலாந்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Source link