IND Vs ENG 3rd Test Day 2 Highlights England Trail By 238 Runs Agianst India Saurashtra Cricket Association Stadium

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. 
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது.  இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது.
ரோகித், ஜடேஜா, சர்ப்ராஸ்:
முன்னதாக, இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா 196 பந்துகள் களத்தில் நின்று 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 131 ரன்களை குவித்தார். அதேபோல், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 225 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 112 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியின் மூலம் அறிமுக வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் களம் இறங்கிய சர்பராஸ் கான் 66 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என 62 ரன்களை குவித்தார்.
இதனிடையே இரண்டாவது நாள் ஆட்டத்தில் துருவ் ஜூரல் சிறப்பாக விளையாடி 46 ரன்களை எடுத்தர். அஸ்வின் 37 ரன்களும், ஜஸ்ப்ரித் பும்ரா 26 ரன்களும் எடுக்க இவ்வாறாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சதம் விளாசிய பென் டக்கெட்
இந்நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் அஸ்வின் வீசிய 13 வது ஓவரின் முதல் பந்தில் கிராவ்லி தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம்  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
இதனிடையே, அதிரடியாக விளையாடி வந்த இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் சதம் விளாசினார். அவர் 118 பந்துகளில் 21 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 133 ரன்களுடன், ஜோ ரூட்டுடன் களத்தில் இருக்கிறார். இவ்வாறாக இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃபராஸ் கான் ரன் அவுட்.. கடுமையாக சாடிய ரசிகர்கள்! வருத்தம் தெரிவித்த ஜடேஜா!
மேலும் படிக்க: Most Test Wickets: 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்! டெஸ்ட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் யார்? லிஸ்ட் இதோ!
 

Source link