டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள டெல்லியில் மதுபான கொள்கையை சாராய நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தி லஞ்சம் பெற்றதாக பகீர் புகார் எழுந்தது.

பரபரப்பை கிளப்பிய கெஜ்ரிவால் கைது:

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அமலாக்கத்துறை கைது செய்து வருகிறது. டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா (கைதுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டார்), ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் அமலாக்க்துறையால் கைது செய்யப்பட்டனர்.

அந்த வரிசையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்டார். சுதந்திர இந்திய வரலாற்றில் சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பதால் தேசிய அளவில் இது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை 10 நாள்கள் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை முன்வைத்து.

லஞ்சம் வாங்கினாரா கெஜ்ரிவால்?

சாராய தொழிலதிபர்களிடம் இருந்து லஞ்சம் கேட்ட முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, "டெல்லி மதுபான கொள்கையை உருவாக்குவதில் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டார்.

மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து மதுபான ஊழலில் முக்கிய புள்ளியாக உள்ளார். முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால்தான். டெல்லி மதுபான கொள்கையை வகுத்து செயல்படுத்தியதற்காக சவுத் குழுமத்திடமிருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றவர் கெஜ்ரிவால்.

மதுபான ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சவுத் குழுமத்துக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டவர் கெஜ்ரிவால். பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக சவுத் குழுமத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் இருந்து 100 கோடி ரூபாய் கேட்டுள்ளார்.

கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 45 கோடி ரூபாய் பணம் ஹவாலா வழிகளில் இருந்து வந்த லஞ்சம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்கமூலமும் சாட்சிகளின் வாக்குமூலமும் அழைப்பு விவரப் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி ஒரு தனிநபர் அல்ல. ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் நடத்தைக்கு ஒவ்வொரு நபரும் பொறுப்பாவார்கள்" என வாதிட்டார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
bonus de Casino en Ligne qui accepte wirecard étrangers
united kingdom is casino royale a real bond film (Coy) slots tips gambling, the united states casino video and play…
online blackjack casino sofortüberweisung 50 euro einzahlung kreditkarte
casino rabassada Visit my site casinos fuera de España
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

மோடி-ட்ரம்ப் சந்திப்பில் திடீர் திருப்பம்: 45 நிமிட செய்தியாளர் சந்திப்பு|‘Any Questions?’: How Trump Turned Modi’s G7 Meet Upside Down | ACTPnews.com

“கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்” – கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ குற்றச்சாட்டு | Mla Kanimozhi Santhosh alleges that the Karur company discussed a package with her | ACTPnews.com

"ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறீர்கள்" – விஜய்யை விமர்சிக்கும் சிபிஎம் பாலகிருஷ்ணன்; பின்னணி என்ன? | ACTPnews.com

“ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்” – பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு | “Hunger strike to urge Tn government to build dam at Rasimanal” – P.R. Pandian announces. | ACTPnews.com

புதுக்கோட்டை: 'பேய் விரட்டும்' போராட்டம்; எலுமிச்சம்பழம், தாயத்து, சிலுவை கட்டிய த.வா.க-வினர்! | ACTPnews.com

hasta que edad puedo entrar al casino Check out my page: todo sobre casinos en vivo