Lookout notice to former DGP Rajesh Das in case of physical harassment of female SP


விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த நிலையில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் டி.ஜி.பி.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியை முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.


பாலியல் வழக்கு:

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது. 
கடந்து வந்த பாதை:
அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ் பி  தரப்பு வழக்கறிஞர்கள்  வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் தீர்ப்பு வெளியானது.

வழக்கின் தீர்ப்பு விவரம் :
 
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது. இவ்வழக்கில் 61 பக்கங்கள் வாதுரையை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பினை நீதிபதி புஷ்பராணி இன்று வழங்கினார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதால்  3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை  தண்டனையும் 20 ஆயிரத்து 500 ருபாய் அபராதம் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்னனுக்கு 500 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
 
மேல்முறையீடு:

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் பலமுறை வாதாட கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்ததால் இன்றே கடைசி வாய்ப்பு என கூறி நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  ஆஜராகினார். அப்போதுபலமுறை கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து உங்களின் வழக்கறிஞர்கள் ஏன் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிடம் நீதிபதி பூர்ணிமா கேள்வி எழுப்பினார்.
நானே வாதாடுகிறேன்
இதனை தொடர்ந்து என் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் நானே வாதாடுகிறேன் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி ராஜேஷ் தாசை வாதாட அனுமதித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஒரு மணி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். அப்போது ராஜேஷ் தாஸ் தான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் தன் மீது வேண்டுமென்றே இவ்வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கில் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளதே உண்மைக்கு புரம்பானது என்றும்  
இவ்வழக்கிற்கு முக்கியமானது பரனூர் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகள் இதில் இல்லை என்றும்,  30 வருடங்களுக்கு மேலாக காவல் துறையில் எந்த புகார்களுக்கும் ஆளாக பணியாற்றிய நிலையில்  வேண்டுமென்றே பொய் புகார் அளிக்கபட்டுள்ளதாக அடுகடுக்கான வாதங்களை ராஜேஷ் தாஸ் நீதிபதி முன்னிலையில் முன் வைத்தார். அவரது வாதங்களை கேட்ட நீதிபதி இவ்வழக்கில் நாளை முதல் 7  நாட்களுக்கு ராஜேஷ் தாசே உடல் நலனை கருத்தில் கொண்டு நண்பகல் வேலையில் அவரே வாதாட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
இந்த நிலையில்  பிப்ரவரி 8 ஆம் தேதி வரை 5 நாட்கள் ராஜேஷ் தாஸ் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூர்ணிமா இவ்வழக்கில் தீர்ப்பு இறுதி தீர்ப்பு வருகின்ற 12.02.2024 ஆம் தேதி வழங்கப்படுமென கூறி 12 ஆம் தேதி வழக்கினை ஒத்திவைத்தார்.
3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி 
அதன்படி, பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சில நிமிடங்களுக்கு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவதாக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு கீழமை நீதிமன்றமான தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார். 
 
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு ஜாமின் வழங்குவதாகவும் நீதிபதி பூர்ணிமா தெரிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேப்போல் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து கீழமை நீதிமன்ற வழங்கிய தீர்ப்பையும்  விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தீர்ப்பளித்துள்ளார். நீதிமன்றம் தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் தலைமறைவானார்.
 
லுக் அவுட் நோட்டீஸ்:
 
இந்த நிலையில், அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும், அவரைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link