இந்தியன் பிரீமியர் லீக் 2024 17வது சீசனில் இதுவரை 8 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆனால், பல்வேறு சாதனைகள் அதற்குள் நாளுக்குநாள் குவிந்து வருகிறது. இன்று ஐபிஎல் 2024ன் 9வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்காக களம் இறங்கிய உடனே டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தனது பெயரில் சிறப்பான சாதனையை படைத்துள்ளது. அதன்படி, தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஐ.பி.எல்.களில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய 7வது வீரர் என்ற பெருமையையும் தனதாக்கினார்.
Walking out in ❤ & 💙 for the 100th time in #IPL 🔥Go well, Skipper 🙌🏻#YehHaiNayiDilli #IPL2024 #RRvDC pic.twitter.com/chXX323zFA
— Delhi Capitals (@DelhiCapitals) March 28, 2024
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அதிக போட்டிகள்:
தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அனுபவ வீரர் அமித் மிஸ்ரா 99 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லி அணிக்காக 7 சீசன்களில் 87 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக நான்காவது அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் டேவிட் வார்னர், இவர் இந்த அணிக்காக 82 போட்டிகளில் விளையாடியுள்ளார். வீரேந்திர சேவாக் ஓய்வு பெற்றாலும், தனது ஐபிஎல் வாழ்க்கையில் டெல்லி அணிக்காக 79 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மற்ற அணிக்களுக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் யார் யார்..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார். ரெய்னா தனது 12 ஆண்டு கால ஐ.பி.எல். வாழ்க்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிக வேகமாக 100 போட்டிகளை கடந்த வீரர் என்ற பெருமையை ஹர்பஜன் சிங் பெற்றார். அதேபோல், 2008 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் விராட் கோலி. இந்த சாதனையை முதன்முதலில் எட்டினார். கெளதம் கம்பீர், கொல்கத்தா அணிக்காக கேப்டனாக இருந்து இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இவரும் வேகமாக 100 போட்டிகளை அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.
அஜிங்க்யா ரஹானே தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால் அவர்தான் முதன் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த சாதனையை படைத்தவர் புவனேஷ்வர் குமார். கடந்த 2024ல் 11வது சீசனில் ஹைதராபாத் களமிறங்கியது முதலே அந்த அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் சார்பில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். இதுவரை எந்த வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண