Actress Sri divya celebrated her 30th birthday today


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீதிவ்யா இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீதிவ்யா நடிகையாக தமிழில் அறிமுகமானார். சிட்டி முதல் கிராம முறை பட்டியை கிளப்பிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை முதல் படத்திலேயே பெற்றுக் கொடுத்தது. எங்கு சென்றாலும் அப்படத்தில் அவர் நடித்த லதா பாண்டி கேரக்டரின் பெயரை சொல்லி அழைக்கும் வழக்கம் இன்றும் தொடரும் அளவுக்கு அப்படம் ஸ்ரீதிவ்யாவுக்கு சிறப்பாக அமைந்தது. 
ஆனால் ஹைதராபாத்தை புரியுமா கொண்ட ஸ்ரீதிவ்யா தனது மூன்றாவது வயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். 2006ம் ஆண்டு வெளியான பாரதி என்ற குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஸ்ரீதிவ்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து 2019 தெலுங்கில் வெளியான காதல் படமான மானசர படம் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற படத்தில் நடித்த நிலையில் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாவதற்கு முன் ஸ்ரீதிவ்யா நகர் புறம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் வெளியாகவில்லை.

Wishing the beauty queen of Kollywood Sri Divya a very happy birthday 🦋✨#HBDSriDivya #SriDivya #OnePlusNordCE4pic.twitter.com/tszUT3HgRV
— • (@introvert_lub) April 1, 2024

தொடர்ந்து தமிழில் ஜீவா, காக்கிச்சட்டை, வெள்ளக்காரத் துரை,ஈட்டி,  பெங்களூரு நாட்கள், பென்சில், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற என சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். இதில் 2016ல் மட்டும் ஸ்ரீ திவ்யா நடிப்பில் 6 படம் வெளியானது. 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை கிட்டதட்ட சினிமாவுலகில் இருந்து அவர்  விலகி இருந்தார். அவருக்கு என்னாச்சு என ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கேள்வியெழுப்பினர். 
தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான ஜன கன மண படம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார் ஸ்ரீதிவ்யா. கடந்தாண்டு தமிழில் ரெய்டு படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்தி நடித்து வரும் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார். 3 வயதில் தொடங்கிய ஸ்ரீதிவ்யாவின் சினிமா பயணம் 30 வயதிலும் தொடர்ந்து வருகிறது. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

மேலும் காண

Source link