ஏற்கனவே அயலான் படம் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் என தெரியவருகிறது.
சிவகார்த்திகேயன்
கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின. மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ. இதில் நம்ம வீட்டு பிள்ளை ஃபேமிலி ஆடியஸை கவர்ந்து நல்ல வெற்றிப் பெற்றது. மற்ற இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு முதலில் வெளியான டான் படம் 100 கோடி வசூல் சேர்க்க அடுத்ததாக வெளியான ப்ரின்ஸ் படம் படுத்தேவிட்டது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.
ஏற்கனவே பொங்கல் பண்டிகையின் போது அயலான் படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் அடுத்து இரண்டு படங்களுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமரன்
ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் அமரன். சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது.
எஸ்.கே 23
Very happy to have these amazing and talented people on board. Together, something special on your way🎉@Siva_Kartikeyan @rukminitweets@anirudhofficial @dhilipaction @SudeepElamon @sreekar_prasad #ArunVenjaramoodu@teamaimpr pic.twitter.com/WFYhi2DPAx
— A.R.Murugadoss (@ARMurugadoss) February 15, 2024
இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் எஸ்.கே 23. ஏ ஆர் முருகதாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். ருக்மினி வசந்த் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அதாவது, இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன்தான். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தனித்துவமான உடல் மொழியை வெளிப்படுத்த பயிற்சிப் பட்டறைக்கு சென்று தனியாக பயிற்சி எடுத்து வருகிறார் என முருகதாஸ் கூறியுள்ளார். மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் எலமன் மற்றும் தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர்.
இந்த ஆண்டு வெளியாக இருக்கும் இரண்டு படங்களுமே முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்கள் என்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. மேலும் இந்த முறை அவரது மூன்று படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படங்களுக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் காண