புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் இன்று பதவியேற்பு.. யார் இவர்?
தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார். இதற்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது அறையில் பதவி ஏற்கிறார். மேலும் படிக்க..
அதிமுக கொடி, சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இவரும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார். மேலும் படிக்க..
இரும்புச்சத்து நிறைந்த உணவு.. சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு..
ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பிரபல உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு (Red Ant Chutney) புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது. பூச்சிகள் வகைகளில் சிலவற்றை உணவாக சாப்பிடும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நமக்கு சிவப்பு நிற எறும்புகளை கண்டாலே கடித்துவிடும் என்ற அச்சம் ஏற்படும். ஆனால், மயூர்பஞ்ச (Mayurbhanj) மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் சிவப்பு எறும்பை சட்னி செய்து சாப்பிடுவர். இது இந்திய மக்களின் ஒரு முக்கியமான உணவாக உள்ளது. கார சாரமாக சிவப்பு எறும்பு சட்னியை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சிவப்பு எறும்பு சட்னியின் பயன் என்ன? அதற்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டதன் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை இக்கட்டுரையில் காணலாம். மேலும் படிக்க..
ஜொலி ஜொலிக்கும் தங்க கதவு! களைகட்டும் ராமர் கோயில் – வைரலாகும் புகைப்படங்கள்!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கருவறைக்குள் செல்வதற்காக தங்க கதவு பொருத்தப்பட்டுள்ளது. அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் படிக்க..
“பிரதமர் மோடி இருக்க பயமேன்..நிறைய குழந்தைய பெத்துக்கோங்க” ராஜஸ்தான் அமைச்சர் பேசியது என்ன?
பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. மத்திய அமைச்சர்கள் தொடங்கி சாதாரண நிர்வாகிகள் வரை, பலரும் கருத்துகளை தெரிவித்துவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து கேட்போர் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் அனைவரும் நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டி தருவார் என்றும் ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் காரடி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..