7 Am Headlines today 2024 april 2nd headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:
 

10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
பிஎச்.டி படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு – மத்திய அரசின் முடிவுக்கு கி.வீரமணி கண்டனம்.
அருணாச்சல பிரதேச பெயரை மாற்றம் அளவிற்கு நம் நாட்டில் சீனா ஊடுருவி உள்ளது- கனிமொழி.
பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது; மே 6ம் தேதி முடிவுகள் வெளியாகும் என தகவல்.
2019ல் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸுக்கு அடுத்த செங்கல் எப்போது வைப்பீர்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி.
தமிழ்நாட்டுக்கு மாநில அளவிலான செலவின பார்வையாளராக பாலகிருஷ்ணன் நியமனம்.
கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிக்கிறார் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.
குடியரசு தலைவரை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த மோடிக்கு கனிமொழி கண்டனம்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 609 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி. 
மீனவர்களின் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம் – வானதி சீனிவாசன்
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட இலாபம் இல்லை. கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணாமலை

இந்தியா: 

தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரத்தை அரசியலாக்க பாஜக நாடகம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தேர்தல் பத்திர முறைகேடு மூலம் பாஜக ஊழல்வாதிகளின் கூடாரமாகிவிட்டது – ராகுல்காந்தி.
மதுபான கொள்கை வழக்கில் கைதான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு.
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை.
ஆந்திரா அனந்தபுரத்தில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.31 கோடி ரொக்கம் பறிமுதல்.
மார்ச் மாதம் ரூ. 1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.
அருணாச்சலப்பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் வைத்துள்ளதால் சர்ச்சை.
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைப்பு.
விஸ்தாரா விமானிகள் போராட்டத்தால் பல்வேரு நகரங்களில் 49 விமானங்கள் ரத்து. 

உலகம்: 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு விதித்த 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.
மழைக்காலம் தொடங்க உள்ளதால் சோமாலியாவுக்கு 44 லட்சம் காலரா தடுப்பூசி வழங்க ஐநா முடிவு.
தேர்தலை முன்கூட்டியே நடக்கக்கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்.
காஸாவில் உள்ள ஷிபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின.
ஈக்வடார்: கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 8 பேர் உயிரிழப்பு. 
துருக்கியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி.
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு.
ரஷ்யா: தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழப்பு. 

விளையாட்டு: 

மும்பை அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் அஸ்வினுக்கு 200வது போட்டியாகவும், ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டனாக 50 வது போட்டியாகவும் அமைந்தது.
ஐ.பி.எல். விதிகளை மீறிய காரணத்தால் டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட்க்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

 

Published at : 02 Apr 2024 07:06 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link