As Bigg Boss Season 7 Is Over Kamal Haasan Throws A Party For All The Contestants

பிக்பாஸ் சீசன் 7:
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி மொத்தம் 23 போட்டியாளர்களுடன் கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. பவா செல்லதுரை, சரவண விக்ரம், மணி சந்திரா, மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, நிக்சன், அனன்யா ராவ், ஜோவிகா, விஷ்ணு விஜய், பூர்ணிமா, அக்‌ஷயா, ஐஷூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், 28-ஆம் நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விவகாரம், அர்ச்சனா குழுவாக அட்டாக் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் சூடுபிடித்த நிலையில், அதன் பிறகு பரபரப்புகளுக்கும்  கண்டெண்ட்களுக்கும் பஞ்சமில்லாமல் 105 நாள்களை அடைந்தது.
டைட்டிலை வென்ற அர்ச்சனா:
நேற்று முன் தினம் ஜன.14-ஆம் தேதி பிக்பாஸ் க்ராண்ட் ஃபினாலே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாட்டமாக நடைபெற்ற நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றார்.  பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளர் படத்தை வென்றிருக்கிறார். மேலும், பிக்பாஸ் டைட்டிலை வென்ற இரண்டாவது பெண் என்று பெருமையையும் பெற்றிருக்கிறார் அர்ச்சனா.

மேலும், மணி சந்திரா ரன்னர்-அப்பாக உருவெடுத்த நிலையில், அடுத்தடுத்த இடங்களை மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் பெற்றனர். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு  பல வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், ட்ரோலும் செய்யப்பட்டு வருகிறார்.
தடபுடலாக விருந்து கொடுத்த கமல்:
இந்த நிலையில், பிக்பாஸ் முடிவடைந்தவுடன் போட்டியாளர்களுக்கும், பிக்பாஸ் டீமிற்கும் நடிகர் கமல்ஹாசன் விருந்து வைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த முறை ஒட்டுமொத்த டீமிற்கும் பிரம்மாண்டமான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்.  பிக்பாஸ்  போட்டியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த டீமும்  இந்த விருந்தில் கலந்து கொண்டனர். 

பிக்பாஸ் செட் அமைக்கப்பட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த மதிய உணவு விருந்து வழங்கப்பட்டிருக்கிறது.  இந்த விருந்தில் சுமார் 43 வகையான உணவுகள் பரிமாறப்பட்டிருக்கிறது. அதாவது, பெரி பெரி சிக்கன், மட்டன் சுக்கா, இறால் தொக்கு, கடாய் சிக்கன் குழம்பு, கீரனூர் மட்டன், வெஜ் டிக்கா, வெஜ் ஆம்லேட், தென்னங்குருத்து பொறியல், நாகர்கோவில் அவியல், மட்டன் தம் பிரியாணி,  மட்டன் குழம்பு, நெத்திலி மீன் குழம்பு, ஆட்டு கோழி ரசம், ஆட்டு கால் சூப் என இப்படி பலவிதமான உணவுகள் பரிமாறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link