தமிழ்நாடு:
மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், விசிகவுக்கு பானை சின்னமும் இல்லை – தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது; இதுவரை 40 தொகுதிகளில் 1437 பேர் மனுதாக்கல் – 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானர்கள் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
பரனூர், ஆத்தூர் உட்பட 29 சுங்கசாவடிகலில் கட்டணம் உயர்வு – வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விருதுநகரில் தமிழக பாஜக வேட்பாளரை எதிர்த்து டெல்லி பாஜக மோடி அணி நிர்வாகி சுயேச்சையாக போட்டி
நாங்கள் குறைக்க வலியுறுத்தியும் டீசல் விலையை குறைக்கவில்லை; மத்திய அரசுக்கு எதிராக எடப்பாடி திடீர் பேச்சு
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு; சென்னை உட்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு
வாக்கு பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த வழக்கு தள்ளுபடி – நீதிமன்றம் உத்தரவு
இந்தியா:
கெஜ்ரிவால் கைதை விமர்சித்த விவகாரம்; அமெரிக்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம்.
யூடியூபில் இருந்து 22 லட்சம் வீடியோக்கள் நீக்கம்; உலக அளவில் இந்தியா முதலிடம்.
சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி திகார் சிறையில் வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தலையிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிபிஐ இணை இயக்குனர் பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடக்கம்.
டெல்லி மருத்துவமனையில் இருந்து சத்குரு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா – மேற்கு இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு – இந்திய தேர்தல் ஆணையம்
உலகம்:
ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறை விமானத்தை ஜப்பான் உருவாக்க இருக்கிறது.
தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் – பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்.
சிரியாவில் வான்வழி தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு.
பிஜி தீவில் ரிக்டரில் 6.4 அளவிலான கடுமையான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டு உள்ளது.
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைப்பு
விளையாட்டு:
ஐபிஎல் 2024: டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி.
இந்திய ஹாக்கியின் சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு ஸ்ரீஜேஷ், சவிதா உள்ளிட்டோர் பரிந்துரை
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 200-வது போட்டியில் ரோகித் சர்மா நேற்று களமிறங்கினார்.
ஐபிஎல் 2024: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மும்பை அணி.
மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்னை பதிவு செய்தது.
Published at : 28 Mar 2024 07:11 AM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண