Vijay Deverakonda talks about punishment he gave himself after ‘Liger’ failure in recent inteview


லைகர் படத்தின் தோல்வியால் தனக்கு தானே தண்டனை கொடுத்து கொண்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 
ஃபேமிலி ஸ்டார் படம்
தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக திகழும் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “ஃபேமிலி ஸ்டார்”. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், மிருணாள் தாகூர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் திவ்யான்ஷா கௌசிக், அஜய் கோஷ், வாசுகி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பரசுராம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். ஃபேமிலி ஸ்டார் படம் ஏப்ரல் 5 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்துக்கான பிரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
தண்டனை கொடுத்த விஜய் தேவரகொண்டா
இதனிடையே இந்த படத்துக்கான ப்ரோமோஷன் ஒன்றில் விஜய் தேவரகொண்டா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, “​​’லைகர்’ படத்தின் தோல்வி குறித்தும் , பாக்ஸ் ஆபிஸில் படத்தின் ரிசல்ட்டிற்குப் பிறகு அவர் எப்படி உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்கள்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு, “என்னுடைய அணுகுமுறையில் இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லை. ரிலீசுக்கு முன்னும் பின்னும் நான் அப்படியே தான் இருக்கிறேன்.
ஆனால் ஒரு சில பாடங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அது என்னவென்று கேட்டால், அடுத்த 3 படங்களின் வெளியீட்டுக்கு முன்  அதன் முடிவுகளைப் பற்றி பேச வேண்டாம் என நினைத்துள்ளேன்” என விஜய் தேவரகொண்டா பதிலளித்தார். இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை எனவும் அவர் கூறினார். 
நடந்தது என்ன? 
கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் என்ற படம் வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய இப்படத்தில்  அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி ஆகியோருடன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் லைகர் படத்தில் நடித்திருந்தால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 
சுமார் ரூ.100 கோடியில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்தது. வசூலையும் பெறாததை விட சிறப்பான சம்பவத்தால் விஜய் தேவரகொண்டா கடுமையாக கிண்டல் செய்யப்பட்டார். அதாவது லைகர் படம் விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படமாக அமைந்தது. மேலும் பாலிவுட்டிலும் இதன்மூலம் எண்ட்ரீ கொடுத்தார். இப்படிப்பட்ட படம் நெகட்டிவ் ஆன விமர்சனம் பெற்றது. படத்தின் ரிலீசுக்கு முன் பேசிய விஜய் தேவரகொண்டா, ‘லைகர் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். பாக்ஸ் ஆபீஸில் ரூ.200 கோடி வசூலிக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார். இதனால் தான் அவர் ஃபேமிலி ஸ்டார் படத்தை பற்றி பெரிதாக பேசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் காண

Source link