PM Modi: "யாரையும் குறைவாக எடைபோடக்கூடாது.. அணிலே உதாரணம்" ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி,  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது என்ன?

இதை தொடர்ந்து கோயிலில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பல தலைமுறை காத்திருப்புக்குப் பிறகு இன்று நம் ராமர் வந்திருக்கிறார். இந்த இனிய சந்தர்ப்பத்தில், அனைவருக்கும் வாழ்த்துக்கள். சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், என் தொண்டையில் ஒரு கட்டி இருக்கிறது. பேச முடியவில்லை.

இனி, குழந்தை ராமர் கூடாரத்தில் வசிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரம்மாண்ட கோயிலில் வசிக்க போகிறார். ஜனவரி 22ஆம் தேதி சூரிய உதயம் ஒரு அற்புதமான பிரகாசத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜனவரி 22, 2024 என்பது காலெண்டரில் எழுதப்பட்ட தேதி அல்ல. இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்" என்றார்.

அடிமை மனோபாவத்தை உடைத்து, பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு, பொறுமை, தியாகங்களுக்குப் பின், நம் ராமர் இன்று வந்திருக்கிறார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வசனத்தில் ராமர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நடக்க பல தசாப்தங்கள் ஆனது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டது இன்று நிஜமாகியுள்ளது" என்றார்.

"ராமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்"

தொடர்ந்து பேசிய அவர், "இன்று நானும் ஸ்ரீராமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக நம்மால் இப்பணியை செய்ய முடியாமல் போனதற்கு நமது முயற்சியிலும், தியாகத்திலும், தவத்திலும் ஏதோ குறை இருக்க வேண்டும். இன்று இப்பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்.

சாகரிலிருந்து சரயு வரை பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சாகர் முதல் சரயு வரை, ராமரின் பெயரில் கொண்டாட்ட மனநிலை எல்லா இடங்களிலும் தெரிகிறது. ராமர் நெருப்பு அல்ல, ராமர் ஆற்றல். ராமர் என்றால் சச்சரவு அல்ல. ராமரே தீர்வு. ராமர் நமக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உரியவர். இந்த காலக்கட்டத்துக்கு மட்டும் ராமர் உரியவர் அல்ல. அவருக்கு முடிவே இல்லை.

ராம பிரபுவின் பக்தர்கள் இந்த வரலாற்றுத் தருணத்தில் மெய்மறந்துவிட்டனர் என்று எனக்கு உறுதியான அபரிமிதமான நம்பிக்கையும் உள்ளது. நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ராம பிரபுவின் பக்தர்கள் இதை ஆழமாக உணர்கிறார்கள். இந்த தருணம் தெய்வீகமானது. இந்த தருணம் எல்லாவற்றிலும் புனிதமானது.  யாரையும் குறைவாக எடைபோடக்கூடாது. அதற்கு அணிலே உதாரணம்" என்றார்.

Source link