வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் (The GOAT – The Greatest of All Time) திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த மாதம் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ஏற்கெனவே இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார்.
யுவன் இசையில் முதன்முறையாகப் பாடும் விஜய்!
அதன்படி முன்னதாக ரம்ஜான் சிறப்பு அப்டேட்டாக தி கோட் திரைப்படம் வரும் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு விஜய் ரசிகர்களை குஷியாக்கியது. இந்நிலையில் நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ‘தி கோட்’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என இன்று காலை படக்குழு அறிவித்து ரசிகர்களை இரட்டிப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் முதல் சிங்கிள் பாடலின் குட்டி ப்ரோமோ வீடியோ ஒன்றை தற்போது படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார் என்றும், நாளை மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்
யுவன் – நடிகர் விஜய் இருவரும் சுமார் 21 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ளனர். 2003ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் மட்டுமே விஜய்யும் யுவனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் இதுவரை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ள நடிகர் விஜய், கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக டாப் இசையமைப்பாளராக வலம் வரும் யுவனின் இசையில் இதுவரைப் பாடியதில்லை. இந்நிலையில், இந்தப் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.
ரஷ்யாவில் ஷூட்டிங்
தி கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் ஷூட்டிங்கில் தற்போது கலந்துகொண்டு வரும் நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டர் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.
சை – ஃபை மற்றும் டைம் ட்ராவலை மையப்படுத்திய கதையாக தி கோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், லைலா , மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரேம்ஜி எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடித்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை எதிர்ப்பார்த்து விஜய் மற்றும் ரசிகர்கள் என இரு தரப்பினரும் காத்துள்ளனர்.
மேலும் படிக்க: Sonu Sood: ஷூ திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சோனு சூட் – குவியும் கண்டனங்கள்
Bhavana: “நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? கேரள நடிகை வேதனை
மேலும் காண