ICC U19 WC: வெற்றியுடன் தொடங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி; வங்கதேசத்தை புரட்டி எடுத்து அபாரம்

ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதில் லீக் போட்டியில் இந்தியாவும் வங்காள தேச அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியின் இன்னிங்ஸை அர்ஷத் சிங் மற்றும் அர்ஷன் குல்கர்னி ஆகியோர் தொடங்கினர். இதில் குல்கர்னி 17 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த முஷீர் கானும் 3 ரன்களில் வெளியேற இந்திய அணி 31 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் வந்த கேப்டன் உதய் ஷகாரன் தொடக்க வீரர அர்ஷத் சிங்குடன் இணைந்து சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டார். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் குவித்த பின்னர் அர்ஷத் சிங் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அர்ஷத் சிங் 96 பந்துகளில் 6 பவுண்டரி விளாசி 76 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த பிரயான்ஷு மோலியா ஆரவல்லி அவினாஷ் ஆகியோர் தலா 23 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் கேப்டன் உதய் ஷகாரன் தனது விக்கெட்டினை 94 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 64 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த சச்சின் தாஸ் 26 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து இறுதி வரை களத்தில் இருந்தார். இதற்கடுத்து வந்த முருகன் அபிஷேக் அதிரடியாக ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி சார்பில் மருஃப் மிர்தா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதன் பின்னர் 252 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, 50 ரன்களுக்குள் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. முகமது ஷிகாப் மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசி வங்கதேச அணிக்கு நம்பிக்கை அளித்தார். முகமது ஷிகாப் தனது விக்கெட்டினை இழந்த பின்னர் வங்கதேச அணி வீரர்கள் தங்களது விக்கெட்டினை சொற்ப ரன்களுக்கு இழந்து வெளியேறினர். வங்கதேச அணி வீரர்களில் மூன்று பேர் டக் அவுட் ஆனார்கள். இதுமட்டும் இல்லாமல், மூன்று வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இறுதியில் வங்கதேச அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஷவும் பாண்டே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முஷீர் கான் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றது. குரூப் ஏவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Source link