TN Agriculture Budget 2024: வட்டாரத்தில் ஒரு கிராமத்திற்கு மாதிரி பண்ணை


TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, 
வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்:

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு
வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம்
கன்னியாகுமரியில் பரிசோதனை, பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி ஒதுக்கீடு
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.3 கோடி நிதி
பயிர் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.48 கோடி மதிப்பில் ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
12,500 ஏக்கர் பரப்பளவில் சூரிய காந்தி சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும்
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு
துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு
தென் மாவட்டங்களில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 இலட்சத்து விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்
ரசாயன உரங்களின் பயன்பாட்டினைக் குறைத்து மண்ணின் வளம் காக்க, 6 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 இலட்சம் ரூபாயும், 37,500 ஏக்கர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்.
2 லட்சம் விவசாயிகளுக்கு 10 இலட்சம் ஏக்கரில் இடுவதற்காக, 5 இலட்சம் லிட்டர் உயிர் உரங்கள், 7 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் வழங்கப்படும்
வேம்பினைப் பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண்காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட, 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு
725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்
ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு – 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்
 

 
 

மேலும் காண

Source link