ப்ரோ கபடி லீக்:
10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இதில், தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி தபாங் டெல்லி அணியுடன் நடைபெற்ற போட்டியில், 31-42 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அதேபோல், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 36-38 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
தொடர் தோல்வி:
ஆனால், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்தது. அதன்படி, கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற யு.மும்பா அணிக்கு எதிரான போட்டியில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ் அணி. அதன்படி, தாங்கள் விளையாடிய 10 போட்டிகளில் 2 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தான் புள்ளிப்பட்டியலில் 10 இடத்தில் இருக்கும் உ.பி.யோத்தாஸ் அணியை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி. இரு அணிகளுமே தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் இன்று விளையாடும் போட்டியில் தங்களது வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த போட்டி பரபரப்புடன் காணப்படும்.
உ.பி.யோத்தாஸ் vs தமிழ் தலைவாஸ் போட்டி விவரங்கள்:
போட்டி : UP vs TAM, புரோ கபடி 2023, போட்டி 65
தேதி மற்றும் நேரம் : ஜனவரி 10, 2023; இரவு 8:00 மணி
இடம் : டோம், NSCI, மும்பை.
நேரடி ஸ்ட்ரீமிங் : டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.
UP vs TAM உத்தேச வீரர்கள்:
உ.பி.யோத்தாஸ்
பர்தீப் நர்வால், ககனா கவுடா, விஜய் மாலிக், நிதேஷ் குமார் , சுமித், நிதின் பன்வார் மற்றும் குர்தீப்.
தமிழ் தலைவாஸ்
சாகர் , சாஹில் குலியா, அஜிங்க்யா பவார், நரேந்திர, மோஹித், நிதின் சிங், மற்றும் எம் அபிஷேக்.
அணியின் சிறந்த வீரர்கள்:
ரைடர் – பர்தீப் நர்வால்
பர்தீப் நர்வால் 11 போட்டிகளில் 87 ரெய்டு புள்ளிகளுடன் முதல் 7 ரைடர்களில் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் நரேந்தர் மற்றும் அஜிங்க்யா பவாரை விட, பர்தீப் நர்வால் நம்பகமான வீரராக இருக்கிறார்.