தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் ((Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய்.
அரசியலுக்கு எண்டரி கொடுத்த நடிகர் விஜய்:
நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். அதில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam)வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முழுநேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்த நினைக்கும் விஜய், இன்னும் ஒரே படத்தில் நடித்தபிறகு சினிமாவில் இருந்து விலகிவிடுவார். இதனால், விஜய்யின் கடைசி படம் என்ன? யார் இயக்குநர்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு பக்கம், விஜய் அரசியலுக்கு எண்டரி கொடுத்தாலும், விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்தது ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் கடைசி படத்தின் இயக்குநர் யார்?
தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் மைக் மோகன், லைலா, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், என பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால், விஜய்யின் கடைசி படம் இது இல்லை. நடிகர் விஜய் அடுத்ததாக முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்து இருந்த நிலையில், விஜய்யின் 69வது படத்தை தயாரிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், விஜய்யின் 69வது படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண