Tamilnadu CM MK Stalin Attends Spain Investors Conference Efforts To Attract Investments

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை  அதாவது ஜனவரி 27ஆம் தேதி தலைநகர் சென்னையில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். இந்த மாநாடு இன்று நடைபெறவுள்ளதால், முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 
சென்னையில் இருந்து முதலமைச்சர் புறப்பட்டுச் செல்லும்போது நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், ”
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிநது. முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் செல்லும் நான் ஏழாம் தேதி நான் மீண்டும் தமிழ்நாடு திரும்புவேன். 
என்னுடைய கடந்த கால வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை, கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று இருந்தேன். அந்தப் பயணத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய 6100 கோடி முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதே போன்று 2023 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற பொழுது 2000 திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய, 1,342 முதலீடு கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த,  முதலீட்டாளர்கள் வணிக அமைப்புகள் தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவுகிற சாதகமான சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்ற சிறப்பு அம்சங்களையும் எடுத்துக் கூறி இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு தான் சிறந்த இடம் என எடுத்துக் கூறி, அந்த நாட்டு முதலீட்டாளர்களை எடுத்துரைக்க உள்ளேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link