7 Am Headlines today 2024 29th February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

அனைத்து அரசு பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும் நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டம்
பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும் – பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்களால் மறைக்க முயற்சி – மோடிக்கு திமுக கண்டனம்.
குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்க காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.
தமிழ்நாட்டில் மோடி யாரை புகழ்ந்தாலும் பாஜகவுக்கு ஓட்டு கிடையாது – அமைச்சர் ரகுபதி.
மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது.
சாந்தன் இறப்புக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே காரணம் – வேல்முருகன் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் – அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு.
மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு

இந்தியா: 

ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
ஜார்க்கண்ட்: ஜம்தாராவில் ரயில் மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.
ஒய்.எஸ்.ஆர்.காங். எம்.பி ஸ்ரீனிவாசலு பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்தும் விலகினார்.
புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்தை கண்டிபிடித்துள்ளதாக டாடா அறிவிப்பு.
மணிப்பூர் வன்முறையில் இதுவரை 219 பேர் உயிரிழந்திருப்பதாக ஆளுநர் உரையில் தகவல்.
சட்டவிரோத சுரங்க வழக்கு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன்.
2022-23ல் மொத்த கட்சிகளின் வருவாய் ரூ.3077 கோடியில் பாஜக வருவாய் மட்டும் ரூ.2361 கோடி என தகவல்.
மக்களவை தேர்தலில் கேரளாவில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு.
நெல்லை அல்வாபோல் இங்குள்ள மக்களும் இனிமையானவர்கள் – பிரதமர் மோடி.
சண்டிகர் மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் பதவியேற்றார்.

உலகம்: 

பாலஸ்தீனத்தில் தேசிய ஒற்றுமை அரசு அமைப்பது தொடர்பாக இன்று ரஷ்யா பேச்சுவார்த்தை.
பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கு ஷாபாஸ் ஷெரீபை பரிந்துரை செய்தார் நவாஸ் ஷெரீப்.
தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் 2 சவால்கள் உள்ளது – ரணில் விக்கிரமசிங்கே.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாண பேரவைக்கு தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்களை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு.
பசிபிக் கடலில் உள்ள மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு.
இஸ்ரேலில் யாரவுன் பகுதியில் ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல்.
ஹவுதி கிளர்ச்சி படை தளபதி இப்ராஹிம் நஷிரி மீது அமெரிக்கா, பிரிட்டன் பொருளாதார தடை விதிப்பு

விளையாட்டு: 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரஜத் பட்டிதரை பிசிசிஐ விடுவிக்க உள்ளதாக தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-24-க்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை பிசிசிஐ நீக்கியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முழு டெஸ்ட் தொடரில் இருந்து, விராட் கோலி விலகிய நிலையில் வருகின்ற மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல்லில் இருந்தும் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published at : 29 Feb 2024 07:02 AM (IST)

மேலும் காண

Source link