<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூர்யா தூக்கில் தொங்குவது போல டிராமா போட்டு மரியாவை மிரள வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p>
<p>அதாவது எல்லாரும் மரியாவின் பேச்சை கேட்டு ஓடி வந்து பார்க்க அங்கு யாரும் இல்லாமல் இருக்க மரியா தரிசி அடைகிறாள். தாரா மரியாவை கூப்பிட்டு உனக்கு என்னாச்சு? ஏன் இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க என்று கேட்க இல்ல சூர்யா அங்க தூக்குல தொங்கிட்டு இருந்தான் என்று சொல்ல சொத்து நம்ம கைக்கு வர வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இரு என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.</p>
<p>மரியா திரும்பவும் ரூமுக்கு வர சூர்யா தூக்கில் தொங்க மீண்டும் மரியா எல்லாரையும் கூப்பிட எல்லாரும் வந்து பார்க்கும் போது அங்கு யாரும் இல்ல. உடனே மரியா நான் உண்மையை தான் சொல்றேன். நீங்க வேணா சூர்யாவுக்கு வீடியோ கால் பண்ணுங்க அப்போ உண்மை தெரிந்து விடும் என்று சொல்ல வீடியோகால் செய்ய அவன் வீட்டில் இருக்க மரியா ஷாக் ஆகிறாள்.</p>
<p>பிறகு நைட் நேரத்தில் தூங்கி கொண்டிருக்கும் போது அவளுக்கு தண்ணீர் தாகம் எடுக்க ரூமில் தண்ணீர் இல்லாததால் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுக்க வர ஏதோ ஒரு உருவம் கிராஸானது போல் தென்பட பயந்து போய் எல்லாரையும் கூட்ட மறுபடியும் அங்கு யாரும் இல்லாமல் மரியா பல்ப் வாங்குகிறாள். தாராவுக்கும் மரியா தேவையில்லாமல் இப்படி பண்ண மாட்டாளே என்ற சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். </p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















Great content! Keep up the good work!