I Hope These Muscles Are Big Enough Kraigg Brathwaite’s Befitting Reply To Rodney Hogg After Gabba Win

27 ஆண்டுகளுக்கு பின்..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டியை 27 ஆண்டுகளுக்கு பின்னர் வென்று சாதனை படைத்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு, 216 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம்  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 1997ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வெற்றி பெற்றது. அதன்பின்னர், தற்போதுதான் வெற்றி பெற்றது. பல்வேறு தரப்பினரும் இந்த வெற்றியை பாராட்டி வருகின்றனர்.
இந்த பவர் போதுமா?
முன்னதாக, இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றபோது அந்த அணியின் முன்னாள் வீரர் ரோட்னி ஹோஜ், வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பிக்கையற்ற பரிதாபமான அணி என்று கூறியிருந்தார். ஆனால், அவர் இப்படி கூறியதுதான் தங்கள் அணி வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தை கொடுத்தது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்த அவர், “ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது நன்றாக இருக்கிறது. இது எங்கள் அணியினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இத்தனை வருடங்களுக்கு பிறகு இங்கு நாங்கள் வெற்றியை சுவைத்துள்ளோம். இது ஆரம்பம் தான். நாங்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
மிஸ்டர் ரோட்னி ஹோஜ் எங்களை நம்பிக்கையற்ற பரிதாபமான அணி என்று சொன்ன 2 வார்த்தைகள் பெரிய உத்வேகத்தை கொடுத்தது என்பதை இங்கே நான் சொல்ல வேண்டும்.  இந்த உலகிற்கு நாங்கள் பரிதாபமானவர்கள் அல்ல என்பதை சொல்லியிருக்கிறோம். அவரிடம் இந்த தசைகள் போதுமா? என்று நான் கேட்க விரும்புகிறேன்” என்று தன்னுடைய புஜபலத்தைக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: AUS vs WI 2nd Test: “சாதித்த இளம்படை” கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியில் உருகிய ப்ரைன் லாரா!
மேலும் படிக்க: AUS vs WI 2nd Test: “சாதித்த இளம்படை” கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியில் உருகிய ப்ரைன் லாரா!

Source link