ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்று கரூரில் நடந்த பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓபிஎஸ் வருகைக்கு முன்பு போடப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு கட்சித் தொண்டரான முதியவர் ஒருவர் குத்தாட்டம் போட்டார் . மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று கட்சித் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வைகள் அணிவித்தனர். அப்போது எம்ஜிஆர் தோற்றம் கொண்ட தொண்டர் ஒருவர் சால்வை அணிவிக்க வந்தபோது அந்த சால்வையை கையில் வாங்கி ஓ.பன்னீர்செல்வம் அவருக்கே திருப்பி அணிவித்தார்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம்: எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளார். கட்சியை மீண்டும் மீட்டெடுத்து தொண்டர்களின் கையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வகுத்த விதிகளை மீறி, எடப்பாடி பழனிசாமி தனக்காக மாற்றி அமைத்துள்ளார். அதிமுகவில் இப்போது பணம் படைத்தவர்கள் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும்.

பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் தொண்டர்கள் அவரை அந்த பதவியில் இருந்து தூக்கி எறிவார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் காலத்தில் தமிழகத்திற்கு வந்த அமித்ஷா சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் மீண்டும் இணைக்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதனால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். சசிகலாவின் காலில் விழுந்து ஊர்ந்து, ஊர்ந்து போய் முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
A search for how to buy likes on tiktok app should be assessed by delivery transparency, retention, account-security requirements, and…
сравнение на букмейкъри My web-site – футболни прогнози
quem Bola De Ouro Apostas Esportivas online gratis
где купить экскурсии на пхукете https://ekskursiya-phuket.com
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடிதான்!’ – சாடும் திமுக | ACTPnews.com

விஜய் அரசு 2 முக்கிய திட்டங்கள்: யாருக்கெல்லாம் என்ன சலுகை?|Vijay Delivers Two TVK Promises: Who Will Get the Benefits? | ACTPnews.com

புதுச்சேரி: “எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” – சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர் தகவல்! | ACTPnews.com

அமைச்சர் மன்னிப்பு: “இனி இதுபோல நடக்கக் கூடாது" – மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி! | ACTPnews.com

`இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியம் இல்லை' – மாணவியின் கோரிக்கையை நிராகரித்த உ.பி. உயர் நீதிமன்றம் | ACTPnews.com

estrategia Apuestas Betis valencia en vivo