Isaayai Kalaingar Function As Part Of Kalaingar 100 Will Be Held On Today

கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக “இசையாய் கலைஞர்”  என்ற மெல்லிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கடந்தாண்டு ஜூன் 3 ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு திட்டங்கள் அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது. மேலும் ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாக கலைஞர் நூற்றாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.  சமீபத்தில் கூட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா கொண்டாடப்பட்டது. 
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், கார்த்தி, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சாக்‌ஷி அகர்வால், வடிவேலு, பார்த்திபன் என பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இப்படியான நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு “இசையாய் கலைஞர்”  என்ற மெல்லிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

காவிய கலைஞரின் மேவிய புகழுக்கு மகுடம் சூட்டும் “இசையாய் கலைஞர்”- மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி #CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/xitIbvIgoI
— TN DIPR (@TNDIPRNEWS) January 6, 2024

இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கலைஞர்- கலைஞர் விழாக்குழுவின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கலைஞர்- கலைஞர் விழாக்குழுவின் துணைத்தலைவர்களான அமைச்சர்கள் காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோருடன், அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கல், சென்னை மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என  பலரும் பங்கேற்கின்றனர். அதேசமயம் நடிகர் பிரபு வாழ்த்துரை வழங்கும் நிலையில், கவிஞர் யுகபாரதி மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் சிறப்புரை வழங்குகிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் 40 இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் உலக நாடுகள் பலவற்றில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் பல்லவி குழுவினர் மெல்லிசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். 

மேலும் படிக்க: Kalaingar 100: திரையுலகம் எடுத்த கலைஞர் 100 விழா, நூற்றாண்டு நிலைத்திருக்கும்.. உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
 

Source link