Largest Cruise Ship: உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான Icon of the Seas-ல் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல்:
ராயல் கரீபியன் நிறுவனத்தின் Icon of the Seas எனப்படும், உலகின் மிகப்பெரிய சொகுக் கப்பல் மியாமி கடற்கரையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 16 ஆயிரத்து 624 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கப்பல், ஜனவரி 10 ஆம் தேதி ஃபின்லாந்தின் துர்குவில் உள்ள கப்பல் கட்டும் தளத்திலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக்கைக் கடந்து மியாமியை வந்தடைந்த போது , அது ஃபயர்போட் சல்யூட்கள் உள்ளிட்ட மரியாதையுடன் வரவேற்கப்பட்டது. ஆயிரத்து 200 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த Icon of the Seas கப்பலின் எடை 2 லட்சத்து 50 ஆயிரத்து 800 டன் எடையை கொண்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்னதாக, ராயல் கரீபியன் நிறுவனத்தால் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, wonder of the seas கப்பல் தான் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக இருந்தது. அது, ஆயிரத்து 188 அடி நீளம் மற்றும் 2 லட்சத்து 35 ஆயிரத்து 600 டன் எடையை கொண்டுள்ளது.
Welcome aboard Icon of the Seas, the world’s biggest cruise ship via Royal Caribbean. https://t.co/xFomWi1FJj pic.twitter.com/paio7xzwK3
— USA TODAY (@USATODAY) January 27, 2024
சொகுசு கப்பலில் உள்ள வசதிகள் என்ன?
மியாமியில் இருந்து கிழக்கு கரீபியன் பகுதிக்கான இந்த கப்பலின் முதல் பயணம் ஏழு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் பயணிகள் கடல் அலைகளுக்கு மத்தியில் அபரிவிதமான அனுபவங்களை அனுபவிக்க முடியும். நேரத்தை கழிப்பதற்கான ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 20 தளங்களை கொண்ட இந்த கப்பலில் 5,610 விருந்தினர்கள் மற்றும் 2,350 பணியாளர்கள் என மொத்தம் சுமார் 8 ஆயிரம் பேர் பயணிக்கும் அளவிலான இடவசதியை கொண்டுள்ளது.
17 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான மிக பிரமாண்டமான வாட்டர் பார்க், கப்பலின் 16 மற்றும் 17வது தளங்களில் அமைந்துள்ளது. இது கடற்பரப்பில் உள்ள கப்பல்களில் உள்ள மிகப்பெரிய வாட்டர் பார்க்காக இது கருதப்படுகிறது
46 அடி உயரத்திற்கான சறுக்கு மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குடும்ப படகு சவாரி வசதியும் இடம்பெற்றுள்ளது
கான்டிலீவர்ட் இன்ஃபினிட்டி ஸ்விம்மிங் பூல் உள்ளது. இது கடற்பரப்பில் உள்ள மிகப்பெரிய நீச்சல் குளம் (40,000-கேலன் ராயல் பே) ஆகும். மிகப்பெரிய பனி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது
மொத்தமாக 7 நீச்சல் குளங்கள், 6 வாட்டர் ஸ்லைட்கள் உள்ளன
ஏறக்குறைய 50 இசைக்கலைஞர்கள் மற்றும் நகைச்சுவை கலைஞர்கள் மற்றும் பறக்கும் குரங்குகளுடன் கூடிய “தி விஸார்ட் ஆஃப் ஓஸ்”குழுவை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன
கடல் மட்டத்தில் இருந்து 154 அடி உயரத்தில் நின்று பொதுமக்கள் இயற்கை அழகை ரசிக்கலாம்
கப்பலில் 40 க்கும் மேற்பட்ட உணவகங்கள், பார்கள் மற்றும் ஓய்வறைகள் உள்ளன, அவற்றில் பாதி புதியவை
இந்த கப்பலில் 7 நாட்கள் பயணிக்க இந்திய மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது
குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு அரங்கமும் உள்ளது
Take a one minute timelapse walk through of the biggest cruise ship ever built, @RoyalCaribbean Icon of the Seas. pic.twitter.com/GaFul0cXDd
— Cruise Fever (@CruiseFever) January 23, 2024