புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநரான மியாசாகி இயக்கத்தில் வெளியாகும் கடைசி படமாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியாசாகி என்கிற அற்புத கதைசொல்லி
கடந்த 60 ஆண்டுகளாக அனிமேஷன் படங்களில் ஜாம்பவனாக இருந்து வருபவர் ஹயாஓ மியாசாகி . ஹாலிவுட்டில் எத்தனை அனிமேஷன் படங்கள் வெளியானாலும் ஜப்பானிய க்ரியேட்டரான மியாசாகி படங்களுக்கு என்று ஒரு தனித்துவமும் தனி ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது.
ஹாலிவுட் சினிமாவின் தொழில்நுட்பங்களால் பிரதி செய்ய முடியாத பல்வேறு அம்சங்கள் மியாசாகியின் படங்களை தனித்துவமானதாக மாற்றுகின்றன. பாரம்பரிய ஜப்பான் ஓவியங்களை நினைவுபடுத்தும் வகையிலான காட்சிகள், இரைச்சல்கள் அற்று தேவையான இடங்களில் மெளனத்தை மட்டுமே வைத்து கதை சொல்வது. கதாபாத்திரங்களை அவர்களின் சூழல்களுடன் தொடர்புபடுத்துவது ஆகிய அம்சங்கள் மியாசாகியின் படங்களை தனித்துவமாக எடுத்துக் காட்டுகின்றன.
இவை எல்லாவற்றையும் விட மியாசாகி படங்களில் இயற்கைக்கு எப்போதும் ஒரு தனி இடம் கொடுக்கப்படுகிறது. மியாசாகியின் படங்களில் இயற்கையின் அம்சங்கள் தன்னளவில் கதாப்பாத்திரங்களாக மாறிவிடுகின்றன. இயற்கை மீதான அக்கறை தொடர்ச்சியாக இவரது படங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
1997ஆம் ஆண்டு மியாசாகி இயக்கத்தில் பிரின்சஸ் மொனொனோகே (Princess Mononoke) என்கிற படம் வெளியானது. உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமத்தை ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வாங்கியது. ஹாலிவுட்டில் வெளியான இப்படத்தின் ரீமேக் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. அனிமேஷன் படங்களைப் பொறுத்தவரை மியாசாகியின் படங்கள் எப்போதும் பிரதி செய்ய முடியாத படைப்புகளாக இருப்பதே அவற்றின் மிகப்பெரிய வெற்றி.
இதுவரை மொத்தம் 12 படங்களை மியாசாகி இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கியுள்ள த பாய் அண்ட் த ஹெரான் (The Boy And The Heron) படம் கடந்த ஆண்டு வெளியானது. இதுவே மியாசாகியின் கடைசி படமாக இருக்கலாம் என்றும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
த பாய் அண்ட் த ஹெரான் (The Boy and the Heron)
2001ஆம் ஆண்டு மியாசாகி இயக்கிய ஸ்பிரிட்டட் அவே ( Spirited Away) படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. தற்போது இரண்டாவது முறையாக மியாசாகி இயக்கியுள்ள படம் இந்த விருதை வென்றுள்ளது. இந்தப் படம் கூடிய விரைவில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும் காண