Top 5 Indian Bowlers Fastest To Pick 150 Wickets In Test Cricket

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் எப்படியோ அதேபோல் பவுலிங்கிலும் வீரர்கள் கலக்கி வருகின்றனர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஐஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முக்கியமான பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியை தங்களது பந்து வீச்சின் மூலம் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியா டாப் 5 இந்திய பந்து வீச்சாளர்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
5. எரப்பள்ளி பிரசன்னா:
பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர் மற்றும் எஸ் வெங்கட்ராகவன் ஆகியோருடன் இணைந்து விளையாடிய வீரர் எரபள்ளி பிரசன்னா.  இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான எரபள்ளி பிரசன்னா 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அவரது  34-வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய  150-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஆட்டத்தில் பிரசன்னா 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
4. அனில் கும்ப்ளே:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர் அனில் கும்ப்ளே. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 132 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி  619 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் இவர் இருக்கிறார். அதன்படி,  ஜமைக்காவின் கிங்ஸ்டனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற தன்னுடைய 34-வது டெஸ்ட் போட்டியில் 150 வது விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த ஆட்டத்தில் கும்ப்ளே 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3. ஜஸ்ப்ரித் பும்ரா:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர். கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் தன்னுடைய 150 வது விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். தன்னுடைய 34-வது டெஸ்ட் போட்டியிலேயே அதிவேகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்த பட்டியலில் இணைந்துள்ளார். அதன்படி, இதுவரை 152 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் பும்ரா.
2. ரவீந்திர ஜடேஜா:
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அடுத்தபடியாக முக்கியமான வீரராகா இருக்கிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் தன்னுடைய 32-வது டெஸ்ட் போட்டியிலேயே அதிவேகமாக 150- விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தினார். அதன்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான அந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுவரை 69 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள இவர் 280 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
1. ரவிச்சந்திரன் அஸ்வின்:
இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இந்திய அணியின் முக்கியமான பந்து வீச்சாளர். அதன்படி, இதுவரை 97 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள இவர் 496 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. அதேநேரம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் இவர்தான். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அவர் விளையாடிய 29-வது டெஸ்ட் போட்டியிலேயே 150 வது விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video: ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் 5-வது முறையாக அவுட் ஆன சுப்மன் கில்! சச்சினை ஒப்பிட்டு கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
மேலும் படிக்க: India vs England 2nd Test: சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்…மோசமான ரெக்கார்டை செய்த இந்திய அணி!
 

Source link