ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. பெங்களூர் அணி தனது சொந்த மைதானமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மைதானத்தில் வரும் மார்ச் 25ம் தேதி முதல் போட்டியில் ஆட உள்ளது. அந்த போட்டியில் அவர்கள் பஞ்சாப் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியில் ஆடுகிறார்.
டிக்கெட் பெறுவது எப்படி?
இதையடுத்து, ஆர்.சி.பி. அணி தனது சொந்த மைதானத்தில் ஆடும் போட்டிக்கு டிக்கெட் பெறுவதற்கு ஆர்.சி.பி. ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆர்.சி.பி. அணி சின்னசாமி மைதானத்தில் ஆடும் போட்டிக்கு டிக்கெட் பெறுவது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.
மொபைல் போனில் பேஸ் ஆப்பை திறக்க வேண்டும். பின்னர், ஆர்.சி.பி. டிக்கெட்ஸ் என்ற முகப்பு பக்கத்தில் உள்ளதை திறக்க வேண்டும்.
மொபைல் எண்ணை பதிவிட்டு பேஸ் ஆப்பின் உள்ளே செல்லுங்கள்.
பின்னர் எந்த போட்டிக்கு உங்களுக்கு டிக்கெட் வேண்டுமோ? அதைத் தேர்வு செய்யுங்கள்
எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமோ? அத்தனை டிக்கெட்டுகளையும், எந்த சீட்? என்றும் தேர்வு செய்யுங்கள்.
உங்கள் சொந்த தகவலை கிளிக் ஆன் பே என்பதை கிளிக் செய்யுங்கள்
பேஸ் ஆப் மூலம் பணத்தை செலுத்த வேண்டும். ஆர்.சி.பி. இணையதளத்தில் எனது கணக்கின் ஆர்டர்கள் பிரிவின் கீழ் உங்கள் M டிக்கெட்டுகளை பெறவும்.
டிக்கெட்டுகள் விலை:
டி கார்பரேட் – ரூபாய் 3 ஆயிரத்து 300
பி ஸ்டாண்ட் – ரூபாய் 3 ஆயிரத்து 300
சி ஸ்டாண்ட் – ரூபாய் 3 ஆயிரத்து 300
ரசிகர்கள் மாடி என் – ரூபாய் 4 ஆயிரத்து 840
பி1 அனக்ஸ் – ரூபாய் 6 ஆயிரத்து 50
ஈ எக்ஸ்க்யூடிவ் லாங் – ரூபாய் 9 ஆயிரத்து 680
ஐ.பி.எல். தற்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் ஆர்.சி.பி. அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியுடன், 29ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஏப்ரல் 2ம் தேதி லக்னோ அணியுடனும் மோதுகிறது.
இதுவரை பெங்களூர் அணி எந்த ஒரு சீசனிலும் டைட்டில் வெல்லாத அணியாக இருந்தாலும் விராட் கோலிக்காக ஒவ்வொரு சீசனிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்.சி.பி.க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முழுவதும் தவறவிட்ட விராட் கோலி, ஐ.பி.எல். தொடர் மூலமாக கம்பேக் கொடுக்க இருக்கிறார்.
மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல். தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகல்…ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும் படிக்க: ICC Test Ranking 2024: உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை… 6-வது முறை! அஸ்வின் செய்த சாதனை!
மேலும் காண