"நாட்டுக்கான எனது முதல் வாக்கு" முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2024 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை "நாட்டுக்கான எனது முதல் வாக்கு" பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டின் இளைஞர்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். நமது இளைஞர்களும், முதல் முறை வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அவர் எடுத்துரைத்தார்.

வாக்காளர் விழிப்புணர்வு:

பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தங்கள் வளாகங்களில் விரிவான வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்தவும், நமது இளைஞர் சக்தியை ஊக்குவிக்கவும், வாக்களிப்பதன் மதிப்பை அவர்களுக்கு வலியுறுத்தவும், அதிக பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கான தேர்தல் செயல்முறைகளில் பங்கேற்கவும் அவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் இளம் வாக்காளர்களை வெளியே வந்து வாக்களிக்க ஊக்குவிப்பதும், நாட்டின் பெரிய நன்மைக்காக வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிப்பதும் ஆகும். இந்த முயற்சி தேர்தல்களின் முக்கியத்துவத்தையும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் வாக்களிப்பதன் பெருமையையும் குறிக்கிறது.

போட்டிகள்:

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கும். பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / உயர் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்படும், அங்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பு நடவடிக்கைகள் அந்தந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும். மைகவ் தளத்தில் கள நேரடிப் போட்டிகள் மற்றும் ஆன்லைன் போட்டிகள் நடைபெறும்.

Source link