Mlc Kavitha: தெலங்கானவில் பரபரப்பு – முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா வீட்டில் வருமானவரித்துறை சோதனை


Mlc Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் மகள், கவிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் கவிதாவிற்கு சம்மன்கள் அனுப்பி இருந்தன. இந்நிலையில், ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. இதில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு:
கவிதாவுடன் அவரது கணவரின் தொழில்கள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து வீட்டிற்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை. இதையொட்டி கவிதா இல்லம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவிதா தெலங்கானாவில் மேலவை உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் வழக்கு:
மதுபான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து, பூர்வாங்க நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என கவிதா மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் தான், கவிதா வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, டெல்லி அரசிற்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ள மதுபான வழக்கில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு எம்.பி., கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர். அதைதொடர்ந்து, அந்த அமைச்சர்கள் பதவியையும் இழந்தனர். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால், மத்திய அரசின் அழுத்தத்தால் தனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் கூறி வருகிறார். இந்த வழக்கில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனைகளை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link