உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தனது புதிய ஷோரூமை இன்று புதுச்சேரியில் திறந்துள்ளது.

புதுச்சேரியை கலக்கும் மலபார் கோல்டு:

இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, மாடல்கள், டிசைன்கள், தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், மலபார் கோல்டு தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, மலபார் கோல்டு தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர் சுதீர் முகமது, மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் திரு.சபீர் அலி, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதுச்சேரி கிளை தலைவர் அமல்நாத் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 13 நாடுகளில் 340-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி ஆகிய நகரங்களில் 26 கிளைகளை கொண்டுள்ளது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணி கலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பற்றி:

நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக குழுமங்களில் ஒன்றான மலபார் குழும நிறுவனங்களின் முன்னணி பிரிவு தான் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால் மார்க் சான்று பெற்ற வெள்ளி நகை களையும் மட்டுமே விற்பனை செய்கிறது.

அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம்.

வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன் முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…