7 Am Headlines today 2024 april 11th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததால் கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக எப்போதும் முன்னே நிற்கும் ஆட்சி தி.மு.க. ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக என வேலூரில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி வட்டமடிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி வருகையை ஒட்டி நெல்லையில் இன்று முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா: 

சட்டை பட்டன் அணியாத காரணத்தால் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிக்க இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் தொழிற்சாலை ஊழியர்கள் சாப்பிட்ட சமோசாவில் ஆணுறை இருந்ததை தொடர்ந்து 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராம்தேவ் தனது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தில் மோசடி செய்ததாக, உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
சத்தீஸ்கரில் சுரங்க பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு
பரபரக்கும் தேர்தல் களம்: மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார்.
இந்தியாவை உடைக்க வடக்கு – தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது – அமித்ஷா
அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் – தேர்தல் கமிஷன் உத்தரவு.
உத்தரபிரதேசத்தில் 3 பாஜக எம்.பிக்களுக்கு சீட் மறுப்பு.
பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளர்கள் அறிவிப்பு; லாலு பிரசாத்தின் 2 மகள்களுக்கு வாய்ப்பு.
சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.

உலகம்: 

‘கடவுள் துகள்’ கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு.
காஸா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

விளையாட்டு: 

பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வெல்வோருக்கு ரூ. 41 1/2 லட்சம் பரிசு – உலக சம்மேளனம் அறிவிப்பு.
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதல்.
2027ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தென்னாப்பிரிக்காவில் 8 இடங்கள் தேர்வு.
ஐபிஎல் 2024: கடைசி பந்தில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

 

Published at : 11 Apr 2024 07:00 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link