ipl 2024 Playoffs Can Royal Challengers Bengaluru Still Qualify For IPL 2024 Playoffs All You Need To Know


RCB in IPL 2024 Playoffs: பாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இந்தியன் பிரீமியர் லீக் 2023 புள்ளிகள் பட்டியலில் 10வது இடம் அதாவது கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது. 
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, மீதமுள்ள 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 2  புள்லிகளை மட்டுமே பெற்றிருக்கும் இந்த அணி, -1.185 என்ற நிகர ரன் ரேட்டையை பெற்றுள்ளது. 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் கூட, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்தது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான நேற்றைய போட்டியில் மொத்தமாக 549 ரன்கள் குவிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. 
இந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 102 ரன்களும், க்ளாசென் 67 ரன்களும் எடுத்திருந்தனர்.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு  262 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 83 ரன்களும், கேப்டன் டு பிளெசிஸ் 62 ரன்களும் எடுத்திருந்தனர். ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை ப்ளே ஆஃப் கூட தொடுமா என்பது தெரியவில்லை. 

Can Royal Challengers Bengaluru replicate their success from 2016?📷: IPL#ipl2024 #royalchallengersbangalore #rcbforever #rcb #viratkohli #FafduPlessis #mohammedsiraj pic.twitter.com/pBbl3Zb8Mo
— SportsTiger (@The_SportsTiger) April 13, 2024

இந்தநிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப்ஸுக்கு தகுதிபெற, இனி வரும் ஆட்டங்களில் போரினை தொடுக்க வேண்டும். பெங்களூரு அணி மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், அவர்களின் நிகர ரன் ரேட் அதிகமாக இருப்பது அவசியம். 
ஆர்சிபிக்கு எல்லாம் முடிந்ததா..? 
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 ப்ளேஆஃப் இடத்திற்கான தேடலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) வரும் காலம் கடினமான காலமாக இருக்கும். இனி வரும் அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் கூட தோல்வியுற்ற கூடாது. இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 புள்ளிகளை எட்டி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்புகள் அமையும். 
ஐபிஎல் 2024 சீசனில் பெங்களூரு அணியை கணக்கிடாமல் 9 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், மொத்தமாக 4 அணிகள் மட்டுமே பிளே ஆஃப்க்கு தகுதிபெறும். இதற்கு தகுதிபெற வேண்டுமென்றால் 4 அணிகளும் குறைந்தது 16 புள்ளிகளை பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்த 4 அணிகளில் பெங்களூரு அணி தகுதிபெற வேண்டும் எனில், இனி வரும் 7 போட்டிகளிலும் வெற்றிபெற்று ஒட்டுமொத்தமாக 16 புள்ளிகளை பெற்று, நிகர ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும். 
இதற்கு முன்னதாக, ஐபிஎல்லில் 16 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகளுடன் எந்த ஒரு அணியும் பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண

Source link